டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவர்கள் பாகிஸ்தானின் குரல்! - சந்திரசேகர ராவை கடுமையாகத் தாக்கும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

By
Google Oneindia Tamil News

டெல்லி: தெலுங்கானா ராஷ்டிர சமிதி பாகிஸ்தானை எதிரொலிப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்ஆப் மூலம் பாஜக மக்கள் மத்தியில் பொய்களை பரப்பி வருவதாகவும், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கான ஆதாரத்தை கேட்பதில் என்ன தவறு உள்ளது என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியுள்ளார்.

மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடி அளவுக்கு வங்கி மோசடி.. ராகுல் காந்தி திடுக் குற்றச்சாட்டு மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடி அளவுக்கு வங்கி மோசடி.. ராகுல் காந்தி திடுக் குற்றச்சாட்டு

தெலுங்கானா முதல்வர் பாஜகவை நேரடியாக விமர்சித்துப் பேசியதற்கு, பாஜக தரப்பில் இருந்து அவருக்கு தொடர்ந்து கண்டனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

சந்திரசேகர ராவ்

சந்திரசேகர ராவ்

''விவசாயிகள் விரும்பாத வேளாண் புதிய சட்டங்களை பாஜக எதற்காக கொண்டு வந்தது. போராட்டத்தின்போது 700க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்தனர். ஒருவருடங்களாக விவசாயிகள் போராட்டம் நடந்தது. இதையடுத்து, விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றனர். அதன்பிறகும் பாஜக விவசாயிகளிடத்தில் மன்னிப்பு கேட்கவில்லை'' என்று கேள்வி எழுப்பினார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

பாஜக‌

பாஜக‌

மேலும் அவர் கூறுகையில் ''வாட்ஸ்ஆப் மூலம் பொய்களை மட்டுமே பாஜக பரப்புகிறது. நாடு முழுவதும் மதம் சார்ந்த நம்பிக்கைகளை மற்ற மதத்துக்கு எதிராக திருப்பி வருகிறது. மதக்கலவரத்தை தூண்டுகிறது. இது எல்லாவற்றையும் புறம் தள்ளிவிட்டு, நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட வேண்டும்'' என்றார்.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

கடந்த காலங்களில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்தது என்றார்கள். அதற்கான‌ ஆதாரங்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்கிறார். அவர் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது. நானும் கூட அதையே தான்கேட்கிறேன். சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியதற்கான ஆதாரங்கள் எங்கே இருக்கிறது'' என்று சந்திரசேகர ராவ் கேட்டதும், அவருக்கு எதிராக பாஜகவினர் தொடர்து விமர்சித்து வருகின்றனர்.

அனுராக் தாக்கூர்

அனுராக் தாக்கூர்

சந்திர சேகர ராவ் பேசியதற்கு, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளித்துள்ளார். '' காங்கிரஸ் கட்சியும் தெலுங்கானா ராஷ்டிர சமிதியும் பாகிஸ்தானை மட்டுமே எதிரொலிக்கிறது. இவர்களின் வார்த்தைகள் பாகிஸ்தானின் வார்த்தைகளை ஒத்திருக்கிறது. தேர்தல் வரும்போதெல்லாம், அவர்கள் புதிய சோதனைகளை செய்கிறார்கள்.

புதிய பிரச்சனை

புதிய பிரச்சனை

தேர்தல் சமயங்களில் ஹிஜாப் அல்லது சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்ற விஷயங்களில் பிரச்சனை செய்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் வளர்ச்சியைப் பொறுத்தவரை பாஜகவுடன் போட்டியிட முடியாது. சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை கேள்வி கேட்பது கே.சி.ஆரின் மனநிலையை காட்டுகிறது'' என்று அனுராக் தாக்கூர் கூறினார்.

English summary
Anurag Thakur alleged that the Congress and the Telangana Rashtra Samithi were only echoing Pakistan. Before that Telangana CM Chandrasekara Rao asked about Surgical Strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X