'ஜாதிவாரி கணக்கெடுப்பு' பாம்பு புற்றுக்குள் கையை விட்ட தெலுங்கானா காங்கிரஸ் அரசு விழி பிதுங்குகிறது!
டெல்லி: கர்நாடகா மாநிலத்தைத் தொடர்ந்து தெலுங்கானா மாநில அரசும் காங்கிரஸ் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் சிக்கி இருக்கிறது. தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டை செயல்படுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என பிற்படுத்தப்பட்டோர் ஜாதிய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த கோரிக்கையை இடைவிடாமல் பேசி வருகிறார்.

காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதே நிலைமையைத்தான் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் எதிர்கொண்டிருக்கிறார். தெலுங்கானா மாநில அரசும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் அல்லாமல் 46..25% என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் 10.08%. தெலுங்கானாவில் தலித்துகள் 17.43%; பழங்குடிகள் 10.45% இருப்பதாகவும் அம்மாநில அரசின் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போது இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களே முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தெலுங்கானாவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 56.3% இடஒதுக்கீட்டை முதல்வர் ரேவந்த் ரெட்டி அமல்படுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பிஆர்எஸ் வலியுறுத்தி உள்ளது. அத்துடன் இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதி அமைப்புகளும் இந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கான இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்; இல்லை எனில் மாநில அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளன.
இதனால்தான் பாம்பு புற்றுக்குள் கையை விட்டுவிட்ட கதையாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் வெளியே வரவே முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
கேரளா போனவருக்கு.. இங்கே வர டைம் இருக்காதா.. சொதப்பும் காங்.. ஸ்டாலினை தவிக்கவிடுகிறாரா ராகுல்? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications