அக்னிபாத் ரத்து.. மகளிருக்கு அரசு பணியில் 50% இடஒதுக்கீடு.. இளைஞர்களை ஈர்த்த காங்கிரஸ் வாக்குறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அக்னிபாத் திட்டம் ரத்து உள்ளிட்ட அறிவிப்புகள் இளைஞர்களிடம் கவனம் பெற்றிருக்கின்றன.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணி எனும் பெயரில் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இன்று தனது தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் அக்னிபாத் திட்டம் ரத்து, மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% வாய்ப்பு, ரூ.1 லட்சத்தில் இளைஞர்களுக்கு வேலை, அரசு பணிகளில் ஒப்பந்த முறை ஒழிப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் இளைஞர்களிடையே கவனம் பெற்றிருக்கிறது.

The cancellation of the Agnipath scheme in the Congress manifesto has attracted attention among the youth

அக்னிபாத் திட்டம்: உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. இந்திய ராணுவத்தில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்பவர்கள் 'அக்னி வீரர்கள்' என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றலாம். அதற்கு முன்னர் சுமார் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இந்த நான்கு ஆண்டுகள் சேவை முடிந்த பின்னர் இவர்களில் 25% பேர் மட்டும் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டு, மீதமுள்ள 75% பேர் வெளியேற்றப்படுவார்கள். இவர்களுக்கு முதலாம் ஆண்டில் ரூ.30 ஆயிரமும், 4வது ஆண்டில் ரூ.40 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும்.

ரத்து: ஆனால், இந்த திட்டத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. இது இந்தி திட்டத்தின் மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிகபட்ச உயிர் தியாகத்தை கோரும் இந்த பணியில் ஓய்வூதியம் இல்லாதது அதிர்ச்சியளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த திட்டத்தை எதிர்த்து பெரும் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்வதாக காங்கிரஸ் தற்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

ரூ.1 லட்சத்தில் வேலை: பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்னைகளால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. அதற்கேற்றார் போல, அவ்வப்போது வெளிவரும் புள்ளி விவரங்களும் இதனை உறுதி செய்து வந்தன. இந்நிலையில், 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு ரூ.1 லட்சத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

பெண்களுக்கான வேலை: அதேபோல மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 2025ம் ஆண்டு முதல் 50% பணிகள் ஒதுக்கப்படும் என்றும் காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருக்கிறது. மட்டுமல்லாது அரசு பணிகளில் ஒப்பந்த முறை ஒழிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம்தான் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் கொள்கைகளை அமல்படுத்தியது. இதனால் ஏறத்தாழ அனைத்து வேலைகளிலும் கான்டிராக்ட் எனப்படும் ஒப்பந்த தொழிலாளர் முறை அமல்படுத்தப்பட்டது.

ஒப்பந்த முறை ஒழிப்பு: தனியார் துறைகள் மட்டுமல்லாது அரசு துறைகளிலும் ஒப்பந்த வேலை வாய்ப்பு அமல்படுத்தப்பட்டது. இதனால், ஏராளமான இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது. சமூக பாதுகாப்பு இல்லாத வேலைக்கு எதிராக போராட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. ஆனால், இப்போது அரசு துறைகளில் ஒப்பந்தமுறை ஒழிக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறது. இந்த அறிவிப்புகள் இளைஞர்களிடம் கவனம் பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+