கொரோனாவை ஒழித்து கட்டிய.. டெல்லியில் குளு, குளு வானிலை.. 17.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே பதிவு!
கொரோனாவை ஒழித்து கட்டிய.. டெல்லியில் குளு, குளு வானிலை.. 17.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே பதிவு!
டெல்லி: தலைநகர் டெல்லியில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்சமாக 17.6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே பதிவாகியுள்ளது.
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை மிகவும் குறைவாக இருந்து வருகிறது.

டெல்லியில் குறைவான வெப்பநிலை
நேற்று காலை குறைந்தபட்சமாக 17.6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே பதிவாகியுள்ளது. இது ஜூன் மாதத்தில் இதுவரை பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2006-ம் ஆண்டு அன்று ஜூன் 17-ம் தேதி குறைந்தபட்சமாக 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை டெல்லி பதிவு செய்து இருந்தது.

மே மாதம் வெயில்
டெல்லியில் மே மாதம் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. அதன்பிறகு வெப்பநிலை படிப்படியாக குறைந்தது. பொதுவாக ஜூன் மாதங்களில் டெல்லியில் குறைந்தபட்ச வெப்ப நிலையே பதிவாகி வருவதாக வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டவ் தே புயல்தான் காரணம்
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் டெல்லி நகர பகுதியில் 15.6 மி.மீ மழை பெய்தது. புதன்கிழமை மிகவும் லேசான மழை மற்றும் இடியுடன் கூடிய மேகமூட்டமான வானமாக இருக்கும் என்று வானிலை மைய அலுவலகம் கணித்துள்ளது. சமீபத்தில் குஜராத்தில் கரையை கடந்த டவ் தே புயல் டெல்லிக்கு மழையை கொண்டு வந்து குளு, குளு காலநிலை நிலவ வழிவகை செய்தது என்று வானிலை மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொரோனாவை வென்ற டெல்லி
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் தலைநகர் டெல்லி படாதபாடு பட்டது. உயிரிழப்பு அதிகரிப்பு, ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று டெல்லியே நிலைகுலைந்து போனது. அதன்பிறகு முழு ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கையால் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது டெல்லி கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு விட்டது. தற்போது குளுமையான காலநிலை நிலவும் டெல்லியில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications