டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குரங்கு அம்மையில் இருந்த தப்பிக்க என்ன வழி? செய்ய வேண்டியவை! செய்யக் கூடாதவை! மத்திய அரசின் அட்வைஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில் டெல்லி கேரளாவில் பாதிப்பு கவலை தரும் அளவில் உள்ளதால் குரங்கு அம்மை தொற்றை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு, ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்புகளுக்கிடையே கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அம்மாநில மக்களை கடுமையான அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் காரணமாக கேரள மாநிலத்தில் மட்டும் 5வது நபருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை.. நாடு முழுக்க மொத்த பாதிப்பு 8 ஆக உயர்வு!டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை.. நாடு முழுக்க மொத்த பாதிப்பு 8 ஆக உயர்வு!

குரங்கு அம்மை

குரங்கு அம்மை

இது இந்தியாவில் 7வது பாதிப்பு ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கேரளாவில் உயிரிழந்தார். இதனையடுத்து திரிச்சூர் மாவட்டத்தில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவரது உயிரிழப்புக்கு குரங்கு அம்மை மட்டும்தான் காரணமா என்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் குரங்கு அம்மை குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

என்னென்ன செய்யக்கூடாது?

என்னென்ன செய்யக்கூடாது?

இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போது டெல்லி கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் குரங்கு அம்மை வேகமாக பரவி வருவதாக கூறியுள்ள மத்திய அரசு இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பலி கேரளாவில் பதிவாகியுள்ளது சுட்டிக்காட்டி உள்ளது. குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்து வெளியிட்டுள்ள தகவலின் படி குரங்கு அம்மை அறிகுறி இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது குரங்கு அம்மை பாதிப்பு உள்ளவர்கள் பயன்படுத்திய உடைகளை மற்றவர்களின் உடைகளுடன் சேர்ந்து சலவை செய்யக்கூடாது குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களின் துண்டு போர்வை போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது என கூறியுள்ளது.

 செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களை முதலில் தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் பாதிக்கப்பட்ட நபர் அருகில் வசிப்பவராகவோ அல்லது நெருக்கமான தொடர்புடையதாக இருந்தால் முகக் கவசம் மற்றும் கையுறை அணிய வேண்டும் கைகளை சோப்பு தண்ணீர் அல்லது சானிடைசர் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

Recommended Video

    Monkey pox அச்சுறுத்தல்! மக்கள் என்ன செய்யணும்? *Health
    அறிகுறிகள்

    அறிகுறிகள்

    குரங்கு அம்மையால் பாதிக்கப்படவர்களுக்கு கண் எரிச்சல், கண் வலி, பார்வை மங்கு வது, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி உள்ளிட்டவைகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குரங்கு அம்மை நோய்க்கான பொது அறிகுறியாக காய்ச்சல், தலைவலி, தசைவலி, அதிக அளவு சோர்வு, இருமல் மற்றும் தொண்டை வலி ஆகியவை உள்ளது எனவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

    English summary
    As the incidence of monkeypox is spreading rapidly in India, the central government has issued some guidelines to avoid the spread of monkeypox in Delhi and Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X