Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீ சர்ட்டை தூக்கி.. அங்க கை வச்சு.. யாரு பாஜக எம்பி பிரிஜ் பூஷனா? பதிவான குற்றச்சாட்டுகள் இவைதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷன் சிங் மீது டெல்லி போலீஸில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து 6 முறை (1 முறை சமாஜ்வாடி கட்சி சார்பாகவும், 5 முறை பாஜக சார்பாகவும்) எம்பியாக நீடித்து வருகிறார். இவர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் நிலையில், சில பயிற்ச்சியாளர்கள் மற்றும் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியில் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The details of the case registered against BJP MP Brij Bhushan Singh who is accused of sexual harassment have been revealed

இந்த குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கடந்த ஜனவரி மாதம் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் ஆகியோரது தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்றத்தை முற்றுகையிட பெருமளவில் திரண்ட வீரர்கள் முன்னோக்கி சென்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் இவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகட் உள்ளிட்ட வீரர்கள் மீது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், ஜந்தர் மந்தர் பகுதியில் இவர்களுக்கு போராட்டம் நடத்த அனுமதியில்லை என்றும் மறுத்துவிட்டது. போராட்டக்காரர்கள் விரும்பினால் வேறு இடத்தில் அனுமதியளிக்கப்படும் என்றும் கூறியிருந்தனர்.

இது போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்டுத்தியது. இதனையடுத்து பிரிஜ் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், தங்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்தும் ஒலிம்பிக்கில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறிய உள்ளதாக வீரர்கள்/வீராங்கனைகள் அறிவித்தனர்.

அதன்படி கங்கை நதி கரைக்கு வந்த வீரர்களை தடுத்து நிறுத்திய விவசாய சங்கத்தினர், வீரர்களின் பிரச்னையை தீர்க்க தாங்களும் போராட்டம் நடத்துவதாகவும், எனவே பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் எனவும் கூறி பதக்கங்களை பெற்றுக்கொண்டனர். மேலும் இப்பிரச்னைக்கு 5 நாட்களில் உரிய தீர்வு காணப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர். அதேபோல, சர்வதேச மல்யுத்த அமைப்பு மற்றும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆகியவை இந்த விஷயத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்டதற்கும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், டெல்லி காவல் போலீஸில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பதிவான புகார்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, வீராங்கனைகளிடம் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி அருகில் அழைத்து மார்பகங்கள், தோள்பட்டை என உடலின் பல இடங்களில் தொட்டு பேசியிருக்கிறார். அவர்கள் தங்களுக்கு இதில் எவ்வித உடன்பாடும் இல்லை என்று சொன்ன பின்னரும் இது போன்ற செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார்.

மற்றொரு எஃப்ஐஆரில் வேறு ஒரு வீராங்கனை கூறியுள்ளதாவது, "ஒருநாள் ஹோட்டலின் சாப்பாட்டு அறைக்கு என்னை அழைத்த பிரிஜ் சிங், எனது மார்பகத்திலும், வயிற்றிலும் கைவைத்து தடவி பார்த்தார். இதுபோன்று 3-4 முறை மீண்டும் மீண்டும் செய்தார். எனக்கு உடனே நடுக்கம் வந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.

அதேபோல, மற்றொரு வீராங்கணை கூறியுள்ளதாக எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாவது, "பிரிஜ் சிங் எனது கைகளையும், முழங்கால்களையும் தொட்டு தடவி பார்த்தார். அதேபோல, நான் மூச்சை சரியாக விடுகின்றேனா? என்பதை பரிசோதிப்பதை போல என்னுடைய மார்பகங்களை தொட்டு பார்த்தார். அவருடைய தொடுதல் தவறான நோக்கமாக இருக்கிறது என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது" என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேறு ஒரு வீராங்கனை கொடுத்துள்ள புகாரில், "நான் பயிற்சியை முடித்துக்கொண்டு சோர்வாக பாயில் படுத்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென அங்கு வந்த அவர், எனது மூச்சை சரிபார்ப்பதாக கூறி என்னுடைய டீசர்ட்டை மேலே தூக்கி மார்பகங்களை தொட்டு பார்த்தார். இது எதுவும் என் அனுமதியில்லாமல்தான் நடந்தது"

அவருடைய அலுவலகத்திற்கு சென்ற வீராங்கனை கூறுகையில், "என்னுடைய சகோதரரும் உடன் வந்திருந்தார். ஆனால் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லிவிட்டு அலுவலக அறையை தாழிட்டார். பின்னர் என்னை இழுத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்" என குற்றம்சாட்டியுள்ளார்.

மற்றொரு வீராங்னையின் புகாரில், "அவருடைய பாலியல் இச்சைகளுக்கு என்னை இணங்குமாறு கோரினார். இதற்கு ஒப்புக்கொண்டால் விளையாட்டு உபகரணங்களை இலவசமாக வாங்கி தருவதாகவும் கூறியிருந்தார். இப்படியான செயல்கள் தொடர்ந்து அதிகரித்ததால் நாங்கள் காலை, மதியம் மற்றும் இரவு உணவுக்கு தனியாக செல்லக்கூடாது என்று முடிவெடுத்தோம்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+