வானில் தோன்றிய அதிசய நிகழ்வு..முழு சந்திர கிரகணம்..பல்வேறு நாடுகளில் காட்சியளித்த சூப்பர் பிளட் மூன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த ஆண்டுக்கான முதல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ரத்த சிவப்பு நிலா காட்சியளித்தது.

சூரியன் மற்றும் சந்திர ஒரே நேர் கோட்டில் சூரியனின் முழு ஒளியைப் பெறக்கூடிய நாளில் சூரியன் - சந்திரனுக்கு இடையே பூமி அதே நேர்கோட்டில் வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் நிகழ்வு தான் சந்திர கிரகணம் எனப்படுகிறது.

The first lunar eclipse of the year occurred. The blood red moon appeared in many countries, including Australia, New Zealand

இந்த வகையில் இந்த ஆண்டுக்கான முதல் சந்திர கிரகணம் நிகழ்ந்தது. நேற்று மாலை 3 15 முதல் சூப்பர் மூன் எனப்படும் இரத்த சிவப்பு நிலவு காட்சியளிக்க தொடங்கியது. 4.15 மணியளவில் முழு நிலவும் வானில் தோன்றி அதிசயம் நிகழ்த்தியது.

இந்தோனேசியா, ஹாங்காங், ஜப்பான், மெக்சிகோ, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் வானில் தோன்றிய இந்த அரிய நிகழ்வை கண்டு ரசித்தனர். மேலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பசிபிக் பெருங்கடல் பகுதிகள், அமெரிக்காவின் சில பகுதிதிகளில் முழு நிலவு நன்கு தெரிந்தது.

ஆனால் இந்த சூப்பர் மூன் இந்திய மக்களுக்கு ஏமாற்றம் அளித்தது. அருணாச்சல பிரதேசம், அசாமின் ஒரு சில பகுதிகளில் மிக மிக குறுகிய நேரம் தென்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உறுதியாக தெரியவில்லை. அடுத்த சந்திர கிரகணம் 2022-ம் ஆண்டு மே 16-ம் தேதி அன்று நிகழும். ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் இதனை பார்க்க முடியாது. ஆனால் நவம்பர் 2022-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ன்று இந்தியாவில் சந்திர கிரகணம் நிகழும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+