பாஜக, ஆர்.எஸ்.எஸ். மறைத்தது வெளிவருகிறது... இலங்கையில் வெளிவந்துவிட்டது - எச்சரிக்கும் ராகுல் காந்தி
டெல்லி: பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்-உம் சில விசயங்களை மக்களிடம் மறைத்துவிட்டதாகவும் அது தற்போது வெளியாகி இருப்பதாகவும் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் மோசமான விளைவுகள் இதனால் ஏற்படும் எனவும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத் யாதவ், "காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை ஏன் தேர்வு செய்யக்கூடாது. அவரை தான் கட்சித் தலைவராக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

பாஜகவை வீழ்த்த வேண்டும்
அதன் பின்னர்தான் பெரிதாக ஏதாவது நடக்கும். காங்கிரஸ் கட்சியை ஒருவர் இயக்கிக் கொண்டிருக்கிறார் என்றால் அது ராகுல் காந்திதான். பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றிணைவது மிகவும் முக்கியம். நான் எனது கட்சியை ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைத்தது இந்த வழியின் முதல் படி. நாம் இனி ஒன்றிணைந்து பாஜகவை எதிர்த்து வீழ்த்த வேண்டும். அது சவாலான காரியமும் கூட" என்றார்.

அரசியலை கற்றுக் கொடுத்தவர் சரத் யாதவ்
அதன் பின்னர் ராகுல் காந்தியிடம் சரத் யாதவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி நாம் அதுகுறித்து பார்ப்போம். சரத் யாதவ் பல நாட்களாக உடல்நலக்குறைவுடன் உள்ளார். அவரை சந்திக்க வந்தேன். அவர் நலமோடு இருப்பது மகிழ்ச்சி. எனக்கு அரசியலில் பல விசயங்களை கற்றுக்கொடுத்தவர் சரத் யாதவ்.

நாடு முழுவதும் வெறுப்புணர்வு
நாடு மோசமான நிலையில் இருப்பதாக சரத் யாதவ் தெரிவித்த கருத்தை ஏற்கிறேன். நாடு முழுவதும் வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. நாடு பிளவுபட்டு கிடக்கிறது. நாம் நாட்டை மீண்டும் சகோதரத்துவத்தின் பாதையில் ஒன்றுபடுத்த வேண்டும். அதுதான் நமது வரலாற்றின் பகுதி.

மறைத்த ஆர்.எஸ்.எஸ்., பாஜக
கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாக பாஜக, ஆர்.எஸ்.எஸ்., நிறுவனங்கள், ஊடகங்கள் உண்மைகளை மறைத்துவிட்டனர். தற்போது அது மெல்ல வெளிவரத் தொடங்கி உள்ளது. இலங்கையிலும் இதுதான் நடக்கிறது. அங்கு உண்மை வெளியாகிவிட்டன. பொருளாதார அறிஞர்களும் அதிகாரிகளும் தங்கள் திட்டங்களை மற்ற நாடுகளை பார்த்து வகுக்கின்றனர்.

2 முதல் 3 ஆண்டுகளில் அதிர்ச்சி முடிவுகள்
நாமும் அவர்களை போல் மாறப்போவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். அதுபோன்றெல்லாம் நடக்காது. முதலில் நாம் யார்? இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை உணர வேண்டும். அவர்கள் நமது முதுகெலும்பை உடைத்து விட்டார்கள். இதற்கான அதிர்ச்சிகர முடிவுகள் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளில் கிடைக்கும்." என்றார்.
-
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு!












Click it and Unblock the Notifications