வடமாநிலங்களை உறைய வைத்த குளிர்.. டெல்லியில் புதிய ரெக்கார்ட்.. என்ன இவ்வளவு குளிரா!?
டெல்லி: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வரும் நிலையில் டெல்லியில் இந்த பருவ காலத்திலேயே மிகக் குறைந்த அளவாக 4.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு பாகிஸ்தான் அருகே மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் மேற்கத்திய காற்றும் சேர்ந்து பேசுவதால் இந்தியாவின் வடமாநிலங்களில் குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் டெல்லி காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுகிறது.
இதனால் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் பகலிலேயே விளக்கை எரியவிட்டு வாகனங்களில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இந்த பருவ காலத்தில் மிகக் குளிரான காலையாக இருந்தது. நகரில் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 4.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியசாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐஎம்டி அறிவிப்பு
இதேபோல இமாச்சல பிரதேசம், ஹரியாணா, சண்டீகர் மற்றும் டெல்லியில் பல இடங்களில் குறைந்த வெப்பநிலை இயல்பைவிட குறைவாக இருந்தது என்றும் , பின்னர் தலைநகரில் வானம் தெளிவாக இருக்கும் என்றும் இன்று காலை ஐஎம்டி தெரிவித்திருந்தது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவான போதே இந்தக் குளிர் காலத்தின் முதல் அதிக குளிரான நாளை சனிக்கிழமை இருந்தது

மோசமான காற்றின் தரம்
இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியசுக்கு குறைவாகவோ அல்லது அதற்கு சமமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட குறைந்தது. 4.5 டிகிரி செல்சியஸ் பதிவான நிலையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்தது காலை 9 மணியளவில் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 274 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரிலும் கடும் குளிர்
வடமேற்கு இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு குளிர் அலை மற்றும் கடுமையான குளிர் அலை நிலைகள் இருக்கும் என்றும், அதைத் தொடர்ந்து கால நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்த இலையில் ஸ்ரீநகரில் மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது . மேலும் காஷ்மீரின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு பூஜிஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலையே பதிவாகியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications