டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிரட்டும் முன்பக்க ஸ்கூப்.. மழையில் ஓட்ட தனி mode.. டிடிஎஃப் வாசனின் நிஞ்ஜா பைக்கின் சிறப்புகள்!

Google Oneindia Tamil News

டெல்லி: யூடியூபர் டிடிஎஃப் வாசன் வைத்திருக்கும் நிஞ்சா பைக்கின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இளைஞர்கள் இணையதளத்தில் தேடி வருகிறார்கள்.

Recommended Video

    243கிமீ வேகம்... TTF Vasan மீது புகார் கொடுக்கும் நெட்டிசன்கள் *Tamilnadu

    கோவையை சேர்ந்த 22 வயதான வாசன், யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார். இவர் அடிப்படையாக விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் 7-ஆம் வகுப்பு படிக்கும் போதே தந்தையை இழந்தவர். தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்.

    கொரோனா லாக்டவுனின் போது இவர் யூடியூப் சேனலை தொடங்கினார். அதில் பைக்கில் லடாக், நேபாளம் சென்றதால் இவர் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தார். பைக் ஓட்டுவது, கார் ஓட்டுவது என்பது பெரும்பாலான இளைஞர்களுக்கு பிடித்தமான ஒன்று.

    இப்போ சந்தோஷமா? டிடிஎஃப் வாசனை போட்டுக் கொடுத்த பூவை! நோட் பண்ணிய சென்னை போலீஸ்! அடுத்து என்ன கைதா? இப்போ சந்தோஷமா? டிடிஎஃப் வாசனை போட்டுக் கொடுத்த பூவை! நோட் பண்ணிய சென்னை போலீஸ்! அடுத்து என்ன கைதா?

    28 லட்சம் பேர்

    28 லட்சம் பேர்

    தங்களுக்கு பிடித்தமான ஒன்றை வாசன் செய்து வருவதால் இளைஞர்கள் அவரது ரசிகர்களாகிவிட்டனர். அவரது யூடியூப் சேனலை 28 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில் அவர் தற்போது அதிகமாக பேசப்படுகிறார். அவரது வாகன வேகம் குறித்து புகார்கள் எழுந்துள்ளது.

    நிஞ்ஜா பைக்குகள்

    நிஞ்ஜா பைக்குகள்

    இந்த நிலையில் அவர் வைத்திருக்கும் நிஞ்ஜா பைக்குகள் குறித்த சிறப்பம்சங்களை இளைஞர்கள் தேடி வருகிறார்கள். இந்த பைக் ஜப்பான் நாட்டை சேர்ந்தது. கவாஸாகி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தின் பைக் இந்த நிஞ்ஜா பைக்குகள் ஆகும். இந்த பைக்கில் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 948 சிசி இன் லைன் 4 சிலிண்டர் என்சின்கள் உள்ளன.

    எல்இடி விளக்குகள்

    எல்இடி விளக்குகள்

    இந்த பைக்குகளில் எல்இடி விளக்குகள் உள்ளன. இந்த பைக்கின் முன் பகுதியில் ஒரு ஸ்கூப்பு வழங்கப்பட்டுள்ளது. இது இந்த வாகனத்திற்கு கம்பீரத்தை கொடுக்கிறது. இந்த பைக்கின் பின்புறத்தில் இசட் வடிவத்தில் விளக்குகள் உள்ளன. இந்த பைக்குகள் காலநிலை மாற்றத்திற்கேற்ப மாறும் தன்மை கொண்டது. இதில் ஸ்போர்ட்ஸ், சாலை, மழை, ரைடர் என 4 விதமாக mode- கள் உள்ளன.

    நிஞ்ஜா என்றால் என்ன?

    நிஞ்ஜா என்றால் என்ன?

    மழை காலத்தின் போது பயணிக்க ரெயின் எனும் மோடை தேர்வு செய்ய வேண்டும். இதில் ப்ளூடூத் வசதி உள்ளது. இந்த பைக்கின் விலை ரூ 11 லட்சம் ஆகும். இவை 1984களில் பிரபலமடைந்த பைக்குகள் ஆகும். இதன் நீட்சியான மாடலே தற்போது வெளியாகியுள்ளன. நிஞ்ஜா என்றால் ஜப்பானின் கலையான நிஞ்ஜுட்சு என்பதில் நிபுணத்துவம் பெற்றவர். இந்த கலை கொரில்லா போர், மறைந்திருந்து தாக்குதல், வேவு பார்த்தல் என அழைக்கப்படுகிறது.

    English summary
    Here are the specifications of Ninja 900cc bike which TTF Vasan holds.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X