100- 120 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! பிப்.,26ல் வெளியாகும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்..
டெல்லி: எதிர் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த லோக்சபா தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானதாகும். இந்த முறையும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி களம் இறங்கும் நிலையில், அவர் வெற்றி பெற்றால் தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் தலைவர் எனும் சாதனைக்கு அவர் சொந்தக்காரராவார். அதேபோல, 2025ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இதற்காக மத்தியில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அவசியம்.

எனவே அதற்கான வேலைகளில் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் என இரண்டு மாநிலங்களில் உள்ள 120 தொகுதிகளை அப்படியே அள்ள திட்டமிட்டிருக்கிறது. இதற்காக பாரத ரத்னா விருதை மத்திய அரசு பயன்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பீகார் மாநிலத்தை பொறுத்த அளவில், முன்னாள் முதல்வரும் முதல் முறையாக இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு வடிவம் தந்தவருமான கா்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னாவை மத்திய அரசு சமீபத்தில் வழங்கியது.
இதன் மூலம் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், சௌத்ரி சரண் சிங்கிற்கு அறிவித்ததன் மூலம் அவரது பேரன் ஜெயந்த் சௌத்ரியின் தலைமையில் இயங்கும் ராஷ்ட்ரீய லோக தளமும் தேசிய ஜனநாய கூட்டணியின் ஓர் அங்கமாக மாற்றி, வாங்கு வங்கி சதவிகிதத்தை பாஜக உயர்த்தி இருக்கிறது. இது தவிர ராமர் கோயில் திறப்பும் பாஜவின் அரசியல் மைலேஜை அதிகரித்திருக்கிறது. வட மாநிலங்களில் இப்படியாக தேர்தலுக்கு ரெடி ஆனாலும், தென் மாநிலங்களில் பாஜக கொஞ்சம் தடுமாறியே வருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் சமீபத்தில் நடத்திய போராட்டங்கள் பாஜகவை சற்று பலவீனமாக்கியுள்ளது. நிதி பகிர்வில் தென் மாநிலங்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் இந்த போராட்டத்திற்கான காரணம். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக எம்பிக்கள், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இப்படியாக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், விரைவில் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வரும் 26ம் தேதி இந்த பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதில் 100-120 வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications