குழந்தைகளை தாக்கும் கொரோனா வைரஸ்.. இந்தியாவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது எப்போது?
டெல்லி: புதிய மாறுபாடு அடைந்த கொரோனா வைரஸ் குழந்தைகளை தாக்கி வரும் நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா முதல் அலையை விட கொரோனா இரண்டாவது அலை புதிய தலைமுறையினரை அதிகம் பாதித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகளுக்கு பாதிப்பு
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருவ மாறுபாடு அடைந்து வரும் நிலையில் உலகத்தின் சில நாடுகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகமாக இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் 12 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அங்கீகாரம் அளித்துள்ளது.

சிங்கப்பூர் அனுமதி
தற்போது சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை 12-15 வயதுக்குட்பட்டவர்களில் அவசரகால பயன்பாட்டிற்காக ஃபைசர் தடுப்பூசியை அனுமதித்துள்ளன. சிங்கப்பூரில் பல பள்ளி குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஃபைசர் தடுப்பூசி 12 முதல் 15 வயதிற்குட்பட்ட வயதினருக்கு உயர் செயல்திறன் மற்றும் பாதுகாப்பை நிரூபிக்கிறது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங் தெரிவித்தார்.

இந்திய குழந்தைகளுக்கு அச்சுறுத்தல்
இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் தற்போது சிறுவர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை அதிக அளவில் குழந்தைகளை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மத்திய சுகாதார அமைச்சின் மருத்துவ சேவை இயக்குனர் கென்னத் மேக்கும் புதிய மாறுபாடு அடைந்த வைரஸ் குழந்தைகளை பாதிக்கிறது என்று கூறினார்.
Recommended Video

தடுப்பூசி எப்போது?
இந்தியாவில் குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசியை மத்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஆனால் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சினின் தடுப்பூசியை 2 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளிடம் செலுத்தி பரிசோதனை செய்ய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அனுமதி வழங்கினார். இன்னும் 10 நாட்களில் இதற்கான சோதனை தொடங்கவுள்ளது என்று கூறப்படுகிறது. மத்திய அரசு கடந்த வாரம் குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறையையும் கொண்டு வந்தது. குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசியை அங்கீகரித்து விரைவில் தடுப்பூசி போடும் பணியை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications