டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Neo Cov: நியோகோவ் உருமாறவில்லை.. மனிதர்களுக்கு இப்போது பரவாது.. வூஹான் விஞ்ஞானிகள் சொன்னது இதுதான்

Google Oneindia Tamil News

டெல்லி: நியோகோவ் வைரஸ் குறித்த வூஹான் விஞ்ஞானிகளின் அசல் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் என்ன? இந்த வைரஸுக்கு நாம் அச்சப்பட தேவையா என்பதையும் பார்ப்போம்.

Recommended Video

    NeoCov எப்படிப்பட்டது? | Data Analyst Vijayanand | Oneindia Tamil

    ஆல்பா முதல் டெல்டா , டெல்டா முதல் ஓமிக்ரான் என வரிசையாக வந்த புதிய வேரியண்ட்களால் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. ஒவ்வொரு வேரியண்டும் முடிவுக்கு வரும் போது "அடுத்து புதுசா என்ன பூதம் (வைரஸ்) கிளம்ப போகுதோ" என மக்களை ஒரு வித பீதியிலேயே வைத்திருந்ததற்கு காரணம் அந்த வைரஸ்கள் ஏற்படுத்திய உயிரிழப்புகளும் பாதிப்புகளும் என சொல்லலாம்.

    இன்று முடியும், நாளை முடியும் என வரும் அன்றாட செய்திகளை மக்கள் நம்பிய நிலையில் தற்போது புதிதாக நியோகோவ் எனும் வைரஸ் பரவுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். நேற்று முதல் இந்த வைரஸ் குறித்து இந்தியர்கள் அதிகம் தேடி தேடி படித்தார்கள்.

    NeoCov: நியோ கோவ் வைரஸால் 3ல் ஒருவர் பலி என பரவும் தகவல்..பீதி வேண்டாம் என்கிறார் டேட்டா நிபுணர்NeoCov: நியோ கோவ் வைரஸால் 3ல் ஒருவர் பலி என பரவும் தகவல்..பீதி வேண்டாம் என்கிறார் டேட்டா நிபுணர்

    நியோகோவ்

    நியோகோவ்

    கூகுள் தகவலின்படி நியோகோவ் எனும் புதிய வைரஸ் குறித்து இந்தியாவில் 5 லட்சத்திற்கும் மேலானவர்கள் தேடி தேடி படித்தனராம். கொரோனா 3-ஆவது அலை ஓமிக்ரானோடு முடியும் என நினைத்த நிலையில் இந்த நியோகோவை புதிய வேரியண்ட்டாகவே மக்கள் பாவித்துவிட்டார்கள். முதலில் நியோகோவ் குறித்து மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

    வூஹான் ஆராய்ச்சியாளர்கள்

    வூஹான் ஆராய்ச்சியாளர்கள்

    இதற்கு வூஹான் ஆராய்ச்சியாளர்களின் அசல் ஆய்வறிக்கையில் என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நியோகோவ் என்பது மெர்ஸ்- கோவ் எனும் வேரியண்டுடன் தொடர்புடையது. மெர்ஸ் கோவ் என்பது கொரோனா வைரஸ் குடும்பத்தில் மிகவும் பெரியது. மனிதர்களை தாக்கும் 7 கொரோனா வைரஸ்களில் ஒன்றுதான் இந்த மெர்ஸ் கோவ் வைரஸாகும்.

    ஆய்வறிக்கை

    ஆய்வறிக்கை

    இது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் 2010-ஆம் ஆண்டு பரவி வந்தது. உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி மெர்ஸ் கோவ் பாதித்தவர்களில் 35 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடைய வேரியண்ட்டாக நியோகோவ் இருக்கலாம். இது புதிய கொரோனா வைரஸோ அல்லது வேரியண்ட்டோ அல்ல. வூகான் விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூட கொரோனா வைரஸின் புதிய வடிவம் நியோகோவ் என குறிப்பிடவில்லை.

    மெர்ஸ் கோவ்

    மெர்ஸ் கோவ்

    வூஹான் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். 2010ஆம் ஆண்டில் பரவிய மெர்ஸ் கோவ் எனும் உயிர் கொல்லி வைரஸின் மரபணு வரிசையில் 85 சதவீதம் இந்த நியோகோவில் ஒற்று இருக்கிறது. நியோகோவ் வவ்வால்களில் இருந்து ACE2 செல்கள் மூலம் நோய்த் தொற்றை ஏற்படுத்த முடியும். நியோகோவ் T510F எனும் உருமாற்றத்திற்கு பிறகு மனிதர்களை தாக்கும். மெர்ஸ் கோவ் சுவாச நோய் கொரோனா வைரஸ் மற்றும் சில வவ்வாலிலிருந்து பரவும் கொரோனா வைரஸ்களில் டீபெப்டிடில் பெப்டிடேஸ்- 4 (Dipeptidyl peptidase-4 (DPP4))எனும் ஏற்பிகள் (Receptors) உள்ளன.

    நியோகோவ்

    நியோகோவ்

    எனினும் வவ்வால்களில் காணப்படும் இந்த நியோகோவில் உள்ள ஏற்பிகள் குறித்து புதிராகவே உள்ளது. நியோகோவ் மற்றும் அதனுடன் தொடர்புடைய PDF-2180-CoV வைரஸில் எதிர்பாராதவிதமாக ஆஞ்சியோடென்சின் 2 எனும் என்சைம் இருப்பதை கண்டறிந்தோம். (ஆஞ்சியோடென்சின் 2 என்சைம் (Angiotensin-converting enzyme 2) என்பது ரத்த குழாய்களை சுருக்கும் ஆற்றல் கொண்டவை. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.) இந்த நியோகோவ் மனிதர்களுக்குள் நுழைவது என்பது குறைந்த அளவே சாத்தியம் உள்ளது.

    ஆய்வறிக்கை

    ஆய்வறிக்கை

    மனிதர்களுக்கு இந்த என்சைம் நுழைவதிலிருந்து கட்டுப்படுத்த ஒரு மூலக்கூறு நியோகோவில் இருக்கிறது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம். மனிதர்களுக்கு T510F என்ற உருமாற்றம் அடைந்தால் மட்டுமே நியோகோவ் பரவும். தற்போது வரை நியோகோவ் உருமாற்றம் அடையவில்லை. எனவே மனிதர்களுக்கு பரவும் என்ற அச்சம் இப்போதைக்கு வேண்டாம் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

    English summary
    There is nothing to worry about the Neo Cov till it gets one mutation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X