எச்சரிக்கை.. அடுத்த மாதம் நாட்டில் கொரோனா 3ஆம் அலை.. அடித்துச் சொல்லும் எஸ்பிஐ வல்லுநர்கள்
டெல்லி: கொரோனா 2ஆம் அலையிலிருந்து இந்தியா மீண்டு சில மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், கொரோனா 3ஆம் அலை அடுத்த மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ வல்லுநர் குழு கணித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் கடந்த சில மாதங்களாகவே மிக மோசமாக இருந்தது. தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சத்தைத் தாண்டியது.
இந்த காலகட்டத்தில் மத்திய அரசு எந்தவொரு ஊரடங்கையும் அமல்படுத்தவில்லை என்றாலும், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் எதோ ஒரு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கொரோனா பாதிப்பு
கொரோனா இரண்டாம் அலை இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு 40 ஆயிரமாகக் குறைந்துள்ளது. ஆனால், அதற்குள் கொரோனா 3ஆம் அலை பற்றிப் பரவும் தகவல்கள் கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாட்டில் ஏற்படும் கொரோனா 3ஆம் அலை குறித்து பல்வேறு ஆய்வாளர்களும் தங்கள் கணிப்புகளைக் கூறி வருகின்றனர்.

எஸ்பிஐ வல்லுநர் குழு
இந்நிலையில், நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ 'Covid-19: The race to finishing line' என்ற தலைப்பில் கொரோனா 3ஆம் அலை பற்றிய ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் கொரோனா 3ஆம் அலை அடுத்த மாதம் நாட்டில் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த அலை வரும் செப்டம்பர் மாதம் உச்சமடையும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் கொரோனா 3ஆம் அலை
எஸ்பிஐ அளித்த அறிக்கையின்படி, "நாட்டில் கொரோனா 2ஆம் அலை ஏப்ரல் மாதம் தொடங்கி, மே 7ஆம் தேதி உச்சமடைந்தது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் நாட்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.நமக்கு தற்போதுள்ள தரவுகளை வைத்துப் பார்த்தால் ஜூலை மாதம் தினசரி பாதிப்பு 10 ஆயிரமாக இருக்கும். ஆனால் இது ஆகஸ்ட் மாதம் அதிகரிக்கத் தொடங்கும். செப்டம்பரில் உச்சமடையும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

வேக்சின் பணிகள்
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், இதைப் பயன்படுத்தி வேக்சின் பணிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், வேக்சின் பற்றாக்குறை இன்னும் தீரவில்லை. இதனால் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வேக்சின் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications