• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த மிட்டாய் ரொம்பவே காஸ்ட்லி.. விலை ஜஸ்ட் ரூ.16,000 தான்.. காரணம் மேலே உள்ள தங்கம்!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி இனிப்பகம் ஒன்றில் தங்கம் சேர்த்த இனிப்புகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இனிப்பின் விலை ஒரு கிலோ ரூ. 16 ஆயிரம் என்பது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Recommended Video

  இந்த மிட்டாய் ரொம்பவே காஸ்ட்லி.. விலை ஜஸ்ட் ரூ.16,000 தான்.. காரணம் மேலே உள்ள தங்கம்!

  "இந்தப் பிறப்புதான் நல்லா ருசிச்சுச் சாப்பிடக் கிடைச்சது.. " என பிரகாஷ்ராஜ் மாதிரி, பாட்டுப் பாடிக் கொண்டு, விதவிதமாக சாப்பிடுவதில் நம்மில் பலருக்கு ஆர்வம் அதிகம். இதனாலேயே சமையல் கலைஞர்களும் உணவுப் பதார்த்தங்களை விதவிதமான சுவையில், வடிவத்தில் தயாரித்து அவற்றை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

   டெல்லியில் விஸ்வரூபம்: 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள், 402 நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு டெல்லியில் விஸ்வரூபம்: 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள், 402 நாடாளுமன்ற பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு

  அந்த வகையில் மிகவும் விலையுயர்ந்த தங்கத்தை உணவுப் பொருளில் சேர்ப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அது சுவைக்காக சேர்க்கப்படுகிறதா அல்லது பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் எனச் சேர்க்கப்படுகிறதா என்பதெல்லாம் வேறு கதை. ஆனால், இது போன்ற வித்தியாசமான உணவுப் பொருட்கள் இணையம் மூலம் விரைவாக மக்களைச் சேர்ந்து, அவர்களையும் அதனை வாங்கும்படி ஏங்க வைத்து விடுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

  தற்போதும் அப்படித்தான் தங்க முலாம் பூசப்பட்ட மிட்டாய் இன்று இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

  தங்க முலாம் மிட்டாய்

  தங்க முலாம் மிட்டாய்


  டெல்லி முஜிப்பூர் பகுதியில் உள்ள ஷகுன் ஸ்வீட்ஸ் என்ற இனிப்பகத்தில் தான் இந்த தங்க முலாம் பூசப்பட்ட மிட்டாய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அர்ஜூன் சவ்கார் என்பவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

  சுடச்சுட சாப்பிடலாம்

  சுடச்சுட சாப்பிடலாம்


  அந்த வீடியோவில் சமையல் கலை வல்லுனர் ஒருவர் சுடச்சுட மிட்டாய் தயார் செய்து, அதில் தங்க முலாம் பூசி, வாடிக்கையாளர்களுக்கு பகிர்கிறார். இதனைப் பார்க்கும் போதே நமக்கும் அதனை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்படுகிறது. அந்தளவிற்கு கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது அந்த மிட்டாய்.

  விலைதான் அதிகம்

  விலைதான் அதிகம்

  ஆனால் இந்த மிட்டாயின் விலையைக் கேட்டால் கொஞ்சம் தலை சுற்றித்தான் போகும். ஆம், இந்த தங்க மிட்டாய் கிலோ ரூ16,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வாங்கிச் சாப்பிட முடியாவிட்டாலும், ஒரு துண்டாவது சாப்பிட்டு ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என இந்தக் கடைக்கு உணவுப் பிரியர்கள் படையெடுத்து வருகின்றனராம்.

  அரை பவுன் தங்கம்

  அரை பவுன் தங்கம்

  நேரில் சென்று இந்த மிட்டாயை வாங்கிச் சாப்பிட முடியாதவர்கள், மற்றவர்கள் சாப்பிடும் வீடியோவைப் பார்த்து, திருப்திப்பட்டு வருகின்றனர். ‘ரூ. 16 ஆயிரம் போட்டு இந்த மிட்டாயை வாங்கிச் சாப்பிடுவதற்கு, நிஜ தங்கம் அரை பவுன் வாங்கி விடலாமே' என யதார்த்தமான பதிவுகளையும் இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் பதிவு செய்து வருகின்றனர். சுமார் 11 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.

  புது டிரெண்டிங்

  புது டிரெண்டிங்

  பொதுவாக நாம் இனிப்புகளுக்கு மேலே ஒரு சில்வர் நிறகோட்டிங் செய்யப்படுவதைப் பார்த்திருப்போம். தற்போது அதற்குப் பதிலாக உண்மையான தங்கம் கலந்த கோட்டிங் செய்வதை டிரெண்டிங் ஆக்கியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்க பிரியாணி, தங்க வடாபாவ் போன்ற உணவுகள் டிரெண்டிங்கானது. தற்போது இந்தப் பட்டியலில் தங்க முலாம் பூசப்பட்ட மிட்டாயும் சேர்ந்து விட்டது.

  English summary
  The video posted on Instagram opens to show how a certain kind of sweet is made and then coated with a layer of golden foil. It is then topped with some saffron or kesar. These sweets, according to this food blogger, are priced at rupees 16,000 per kg.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X