மொத்தம் 5.. பிரதமர் மோடியின் டெய்லி வேலையே இதுதான்.. லிஸ்ட் போட்டு விமர்சித்த ராகுல் காந்தி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விலைவாசியை உயர்த்துவது பற்றியும், இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு குறித்து எப்படி வெற்று கனவுகளை உருவாக்குவது என்பது குறித்தும் யோசிப்பதே பிரதமர் நரேந்திர மோடியின் அன்றாட வேலை என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் தினசரி வேலைகள் என ஐந்தை பட்டியல் போட்டிருக்கிறார். அதில், "பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை எவ்வளவு ரூபாய் ஏற்ற வேண்டும்? எப்படி மக்களின் விலைவாசி உயர்வு பற்றிய விவாதத்தை நிறுத்துவது? எப்படி வேலை வாய்ப்பு குறித்த வெற்று கனவுகளை இளைஞர்கள் மத்தியில் உருவாக்க வேண்டும்? இன்று எந்த அரசு பொதுத்துறை நிறுவனத்தை விற்பனை செய்வது? விவசாயிகளை ஆதரவற்ற நிலைக்கு எப்படி தள்ளுவது?" ஆகிய 5 வேலைகளைதான் பிரதமர் மோடி தினசரி செய்து வருவதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். -

This is the daily work of the Prime Minister, Rahul Gandhi who made the list

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து படுதோல்விகளை சந்தித்து வந்தாலும், ராகுல் காந்தியின் வித்தியாசமான ட்விட்டர் பதிவுகளும், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றும் உரைகளுமே இன்னும் காங்கிரஸ் கட்சியை பேசுபொருளாகவும், எதிர்க்கட்சியகவும் காட்டி வருகின்றன.

குறிப்பாக ட்விட்டரில் அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிகளவில் ரீட்வீட் செய்யப்படுகின்றன. அண்மையில், விலையேற்றம் குறித்து கருத்து பதிவிட்ட ராகுல் காந்தி, "மன்னர் தனது மாளிகையை கட்டிக்கொண்டிருக்கிறார், மக்கள் பணவீக்கத்தால் அடிவாங்கி கொண்டிருக்கிறார்கள்." எனக் குறிப்பிட்டார். -

This is the daily work of the Prime Minister, Rahul Gandhi who made the list

இதேபோல், "கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ வசதி கிடைத்ததா? - இல்லை; ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச வருமானமாவது கிடைத்ததா? - இல்லை; மூழ்கிக் கொண்டிருந்த சிறு தொழில் நிறுவனங்கள் காப்பாற்றபட்டனவா? - இல்லை; PM சிறிதும் அக்கறை கொள்ளவில்லை." என #PMdoesnotCARE என்ற ஹேஷ்டேகின் கீழ் அண்மையில் அவர் வெளியிட்ட பதிவும் அதிகளவில் டிரெண்டானது. -

This is the daily work of the Prime Minister, Rahul Gandhi who made the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+