டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்த மதமும் பலவீனமல்ல! அல்கொய்தா மிரட்டலை கண்டிங்க! மத்திய கிழக்கு நாடுகளுக்கு சிவசேனா ‛அட்வைஸ்’

Google Oneindia Tamil News

டெல்லி: ‛‛ எந்த மதமும் பலவீனமாக இல்லை. அல்குவைதா போன்ற இஸ்லாமிய பயங்கரவாத குழுவின் அச்சுறுத்தலையும் மத்திய கிழக்கு நாடுகள் சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்க வேண்டும்'' என சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறினார்.

ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பான டிவி விவாதத்தில் பாஜகவின் நுபுர் சர்மா இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

இது சர்வதேச அளவில் சர்ச்சையாகி உள்ளது. இந்தியாவுக்கு பல்வேறு முஸ்லிம் நாடுகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்தியா தரப்பில் மன்னிப்பு கோர வேண்டும் என கத்தார் நாடு வலியுறுத்தியது.

ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்.. பாதுகாப்பை அதிகரித்த போலீஸ்!ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்.. பாதுகாப்பை அதிகரித்த போலீஸ்!

இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு

இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு

இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அவர் தனது கருத்தை திரும்ப பெற்றார். இருப்பினும் கத்தாரை தொடர்ந்து ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, ஓமன், பக்ரைன், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்த நாடுகளுக்கு இந்தியா தரப்பில் பதிலும் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் குறித்து பேசிய நபர் கலகத்தை உண்டு பண்ணும் நபர் என இந்திய வெளியுறவுத்துறை கூறி இருந்தது. மேலும், பாஜக தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. அதில், பாஜக அனைத்து மதங்களையும் மதிக்கிறது என கூறப்பட்டு இருந்தது.

அல்கொய்தா மிரட்டல்

அல்கொய்தா மிரட்டல்

ஆயினும் இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நேற்று அல்கொய்தா பயங்கரவாதிகள் இந்தியா மீது தற்கொலை படை தாக்குதல் நடத்துவோம் என மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக அந்த பயங்கரவாத அமைப்பு, ‛‛நபிகள் நாயகம் பற்றி அவதூறு பேசுவோரை நாங்கள் கொலை செய்வோம். இதற்காக எங்கள் உடலிலும், எங்கள் குழந்தைகள் உடலிலும் வெடிகுண்டுகளை கட்டுவோம். டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம்'' என பகீரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.

Recommended Video

    Al Queda Warning To India | தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படும் | Nupur Sharma | Prophet Muhammad
    இந்தியா எதிர்ப்பு

    இந்தியா எதிர்ப்பு

    இந்த மிரட்டலை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் சிவசேனா கட்சியின் ராஜ்யசபா எம்பி பிரியங்கா சதுர்வேதி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்த அல்கொய்தாவை மத்திய கிழக்கு நாடுகள் கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    பயங்கரவாதத்தையும் கண்டிக்கனும்

    பயங்கரவாதத்தையும் கண்டிக்கனும்

    இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛அல்குவைதா போன்ற இஸ்லாமிய பயங்கரவாத குழுவின் அச்சுறுத்தலையும் மத்திய கிழக்கு நாடுகள் சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்க வேண்டும். மத உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என்பது வேறு. அதன் அடிப்படையில் மிரட்டல் விடுப்பது என்பது வேறு. ஒரு சிலரது வார்த்தைகளால் அவர்களின் நம்பிக்கையை வீழ்த்தும் அளவுக்கு எந்த மதமும் பலவீனமாக இல்லை" என கூறியுள்ளார்.

    மத்திய கிழக்கு நாடுகள் எவை?

    மத்திய கிழக்கு நாடுகள் எவை?

    மத்திய கிழக்கு நாடுகள் எ்பதை சிரியா, துருக்கி, லெபனான், ஈராக், ஈரான், இஸ்ரேல், ஜோர்டான், எகி்பது, லிபியா, சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரசு எமிரேட்ஸ் உள்பட 22 நாடுகள் அடங்கும். இந்த நாடுகள் தான் நுபுர்சர்மா விஷயத்தில் தற்போது இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் அல்குவைதா பயங்கரவாத மிரட்டலையும் கண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

    English summary
    Threats from Islamist terror groups such as Al Qaeda should be unequivocally denounced by these Middle East nations as well, says Shiv Sena MP Priyanka Chaturvedi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X