டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முத்தலாக் மசோதாவில் 3 முக்கிய மாற்றங்கள் செய்த மத்திய அரசு.. என்னென்ன தெரியுமா?

இன்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்படும் முத்தலாக் மசோதாவில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்படும் முத்தலாக் மசோதாவில் மூன்று முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

முத்தலாக் மசோதா இன்று லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் செய்யப்பட உள்ளது. தலாக் என்று மூன்று முறை சொல்லி பெண்களை இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து செய்யும் முத்தலாக் முறைக்கு எதிராக இந்த மசோதா கொண்டு வரப்பட இருக்கிறது.

Three amendments have been introduced in the New Triple Talaq bill

கடந்த செப்டம்பர் மாதமே மத்திய பாஜக அரசு இதற்கு எதிராக மசோதா தாக்கல் செய்தது. ஆனால் மக்களைவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மாநிலங்களவையில் தோல்வி அடைந்தது. இதற்காக மத்திய அரசு இதற்கான அவசர சட்டத்தை கொண்டு வந்தது.

தற்போது இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான விவாதம் தற்போது லோக் சபாவில் நடந்து வருகிறது. ஆனால் லோக் சபாவில் அமளி நிலவுவதால் மசோதா முறையாக தாக்கல் செய்யப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த மசோதா மூன்று திருத்தங்களுடன் தாக்கல் செய்யப்பட உள்ளது.

1. இந்த சட்டத்தின் படி, குற்றஞ்சாட்டப்பட்டவரின் மனைவி, இல்லை மனைவியின் நெருங்கிய உறவினர் மட்டுமே புகார் அளிக்க முடியும். வேற்று நபர் புகார் அளிக்க முடியாது.

2. அதேபோல் கணவனும் மனைவியும் வழக்கின் போது சமரசம் அடைந்து கொண்டால், வழக்கை திரும்ப பெற முடியும்.

3.மூன்றாவதாக மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் மனைவியின் அனுமதியுடன் கணவனை பெயிலில் விடுவிக்க முடியும், ஆகிய மூன்று மாற்றங்கள் இந்த சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின் அதன் மீது வாக்கு எடுப்பு நடத்தப்படும்.

English summary
Three amendments have been introduced in the New Triple Talaq bill by BJP government,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X