திருப்பூர் தப்பியது! இந்தியா மீதான வரியை குறைத்த டிரம்ப்! எந்த துறைகள் பலன் பெறும்? விவரம்
டெல்லி: இந்தியா மீது அமெரிக்கா 25% அளவுக்கு பரஸ்பர வரியை விதித்திருந்தது. வரி குறைப்பு தொடர்பாகவும், அமெரிக்காவுடனான வர்த்தகம் தொடர்பாகவும் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்திருந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளது. இதனால் இந்தியா மீதான பரஸ்பர வரியானது 25%லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் பல துறைகள் பலனடையும் என்று சொல்லப்படுகிறது.
இந்த வர்த்தக ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது இந்தியாவுக்கு உடனடி வரிச் சலுகையை உறுதிப்படுத்துகிறது.

வரிச்சுமை குறைந்ததால், அமெரிக்கச் சந்தையில் கணிசமான வர்த்தகம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் லாப வரம்புகளில் நிவாரணம், மேம்பட்ட போட்டித்திறன் மற்றும் சிறந்த ஆர்டர் திட்டமிடல் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். இந்திய ஏற்றுமதியாளர்களிடையே ஜவுளி, கடல் உணவு, வாகன உதிரி பாகங்கள், ரசாயனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோர் நிறுவனங்கள் இதில் முக்கியப் பயனாளிகளாக இருக்கும் எனத் தெரிகிறது.
குறிப்பாக திருப்பூரின் ஜவுளி உற்பத்தி மீண்டும் புத்துயிர் பெரும் என சொல்லப்படுகிறது. இந்திய பின்னலாடைகளுக்கு அமெரிக்கா ஏற்கனவே சுமார் 16% வழக்கமான வரி விதித்து வந்தது. அதனுடன் 2025-ல் அறிவிக்கப்பட்ட கூடுதல் அபராத வரிகளும் சேர்ந்தபோது, மொத்த வரிச்சுமை 65% வரை உயர்ந்தது.
வரி அதிகரிப்பால் இந்திய ஆடைகளின் விலை அமெரிக்கச் சந்தையில் மிக அதிகமாக உயர்ந்தது. இதனால் வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகளுடன் போட்டியிட முடியாமல் திருப்பூர் நிறுவனங்கள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆர்டர்களை இழந்தன. அதிக வரி காரணமாக ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகள் துறைமுகங்களிலும், கிடங்குகளிலும் தேக்கமடைந்தன. பல சிறு மற்றும் குறு நிறுவனங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க ஏற்றுமதியாளர்கள் தங்களின் லாபத்தை முழுமையாகத் தியாகம் செய்து 20% முதல் 25% வரை தள்ளுபடி வழங்க வேண்டியிருந்தது. இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா தனது வரியை 18% ஆகக் குறைத்துள்ளதால், திருப்பூர் நிறுவனங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
65% லிருந்து 18% ஆக வரி குறைந்திருப்பது, அமெரிக்கச் சந்தையில் இந்திய ஆடைகளின் விலையை உடனடியாகக் குறைக்கும். இது மீண்டும் பழைய ஆர்டர்கள் இந்தியாவுக்குத் திரும்ப வழிவகுக்கும். வரிக் குறைப்பால் நிறுவனங்களின் லாப வரம்பு உயரும். இது கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட உதவும்.
-
"என்னை விட்டுருங்க.. "விமானப்படை வீரரின் மனைவி பலாத்காரம்.. கட்டாயப்படுத்தி மதமாற்றம்! பகீர் சம்பவம் -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி












Click it and Unblock the Notifications