நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதம் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்!
டெல்லி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையத்துக்கு 4 மாதங்கள் கால அவகாசம் வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 தேதிகளில் நடைபெற உள்ளன.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பிற மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல்களும் அக்டோபர் 6,9 தேதிகளில் நடைபெற உள்ளன.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை செப்டம்பர் 15-ந் தேதிக்குள் நடத்த கடந்த ஜூன் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்டது.

உச்சநீதிமன்றம் கண்டனம்
உச்சநீதிமன்றம் ஏற்கனவே கால அவகாசம் வழங்கியது. இவ்வழக்கில் மீண்டும் மீண்டும் தமிழக தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்டதால் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கையையும் தாக்கல் செய்தது. அதில், தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 528 பஞ்சாயத்துகள் இருந்தன. இது தற்போது குறைக்கப்பட்டுள்ளன. இதுவரை 664 டவுன் பஞ்சாயத்துகள்- பேரூராட்சிகள் இருந்தன. தற்போது பேரூராட்சிகள் எண்ணிக்கை கூடுதலாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் கூடுதலாக 6 மாநகராட்சிகளும் 28 நகராட்சிகளும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. திருச்சி, நாகர்கோவில், ஓசூர், தஞ்சாவூர் மாநகராட்சி எல்லைகளும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால்தான் கால அவகாசம் கேட்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கில் திடீர் திருப்பம்
இதனிடையே இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்னர் புதிய திருப்பம் ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சங்கர் தரப்பு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், தமிழக தேர்தல் ஆணையத்துக்கு கூடுதல் அவகாசம் வழங்க தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவகாசம் வழங்கிய சுப்ரீம் கோர்ட்
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக தேர்தல் ஆணையம் காரணங்கள் மிக மோசமானதாக் இருக்கிறது. இருந்தபோதும் அடுத்த 4 மாதங்களுக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications