ஒரு தடவைனா ஓகே! மீண்டும் மீண்டுமா? டங்க் ஸ்லிப்பான ஓபிஎஸ் வழக்கறிஞர்.. புரியாமல் நின்ற எடப்பாடி டீம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் சில சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன.

அதிமுக பொதுக்குழு வழக்கு தீவிரமாக நடந்து வருகிறது. பொதுக்குழு வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு, எடப்பாடி பழனிசாமி தரப்பு இன்று உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைக்க உள்ளனர். பிற்பகல் 12 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கி உள்ளது. பெரும்பாலும் இன்றோடு வழங்கில் விசாரணை முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று எடப்பாடி தரப்பு வழக்கில் வாதம் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலை வரை வழக்கு விசாரணை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்த வழக்கறிஞர்

மூத்த வழக்கறிஞர்

அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று ஓ பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர்கள் டீம் ஒன்று ஆஜரானது. இந்த வழக்கில் ஓபிஎஸ், எடப்பாடி ஆகிய இருவரும் பெரிய அணியை களமிறக்கி உள்ளனர். முக்கியமாக எடப்பாடி தரப்பில் டெல்லியை சேர்ந்த முகுல் ரோத்தகி உள்ளிட்ட பல மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ரஞ்சித் குமார் என்று வாதம் வைத்த போது கோர்ட்டே அவரைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தது. காரணம் அவரின் உச்சரிப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது.

உச்சரிப்பு

உச்சரிப்பு

அவர் சொன்ன வார்த்தைகள் மிகவும் வித்தியாசமாக இருந்தன. உதாரணமாக கழகம் என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. அவர் கடகம் என்று மீண்டும் மீண்டும் சொன்னார். இதை ஒரு நிமிடம் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர்கள், அங்கே இருந்த சில தமிழ் தெரிந்த வழக்கறிஞர்கள் குழப்பத்துடன் பார்த்தனர். இவர் என்ன சொல்கிறார் என்று தெரியாமல் குழப்பத்துடன் பார்த்தனர். பின்னர் அவர் கடக ரூல்ஸ் என்ற சொன்ன போதுதான் இவர் கழகத்தை பற்றி பேசுகிறார் என்று தெரிந்தது. உடனே நீதிபதிகள் கழகம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டனர்.

கழகம்

கழகம்

ஏனென்றால் நீதிபதிகள் கட்சி என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருப்பார்கள். கழகம் என்ற வார்த்தையை கேட்டு இருக்க மாட்டார்கள். அதனால் கழகம் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பினர். இந்த கேள்வியை தொடர்ந்து வைரமுத்து தரப்பு வழக்கறிஞர் கழகம் என்பது கட்சி என்ற பொருளில்தான் வரும். தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் பின்னொட்டில் இப்படி வைத்து இருக்கும் என்று கூறினார். அதன்பின் ஓபிஎஸ் வழக்கறிஞர் பேசுகையில் மீண்டும் மீண்டும் அவருக்கு டங்க் ஸ்லிப்பானது. சில அதிமுக தொடர்பான தமிழ் வார்த்தைகளை சொல்லும்போது அவர் மீண்டும் மீண்டும் உச்சரிப்பில் தவறு செய்தார்.

அதிமுக அடிப்படை விதி

அதிமுக அடிப்படை விதி

இதனால் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் சில வார்த்தைகளை புரிந்துகொள்ள முடியாமல் நின்றார். நேற்று வழக்கில் அதிமுகவின் அடிப்படை விதிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அதாவது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தனக்கு ஏற்றபடி விதிகளை மாற்றிக்கொண்டார். அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கு கட்சியில் 10 வருடங்கள் இருக்க வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்று விதிகளை மாற்றி உள்ளார். எடப்பாடி முழுக்க முழுக்க தான் மட்டுமே பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று எடப்பாடி இப்படி செய்து இருக்கிறார்.

வாதம்

வாதம்

எடப்பாடி கட்சியின் விதிகளை மாற்றியதே தவறு. எம்ஜிஆர் எதற்காக கட்சியில் தொண்டர்கள் மூலம் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று கூறினாரோ அந்த விதிகளை எடப்பாடி மாற்றி கட்சியின் அடிப்படைக்கு எதிராக சென்று இருக்கிறார். குறுக்கு வழியில் வந்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அடிப்படை விதிகளை மாற்றுவது தவறு. கட்சியின் அடிப்படை விதிகளை மாற்ற முடியாது. அது அரசியலமைப்பு சட்டம் போன்றது என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது. வழக்கின் அடி நாதமே இதில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சற்று நேரத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம் முடிய உள்ளது. அதனால் இன்று எடப்பாடி சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+