உ.பி. முதல் மகாராஷ்டிரா வரை... 20 ஆண்டுகளில் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்குகள்!
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்கு பட்னாவிஸ் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் தங்களுக்கே பெரும்பான்மை உள்ள நிலையில் பாஜகவின் பட்னாவிஸை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ்-என்சிபி-சிவசேனா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இதேபோல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்குகளின் தொகுப்பு:

உ.பி. ஜெகதாம்பிகாபால்
1998-ம் ஆண்டு உ.பி.யில் கல்யாண்சிங் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது 22 எம்.எல்.ஏக்களைக் கொண்ட லோக்தந்திரிக் காங்கிரஸ், அரசுக்கான தமது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதனால் ஆளுநர் பண்டாரி, கல்யாண்சிங் அரசை டிஸ்மிஸ் செய்தார். இதனையடுத்து பாஜகவின் கல்யாண்சிங், லோக்தந்திரிக் காங்கிரஸ் தலைவர் ஜெகதாம்பிகா பால் இருவருமே தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என ஆளுநர் பண்டாரியிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர். ஆளுநர் பண்டாரி, ஜெகதாம்பிகா பாலை முதல்வராக நியமித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குப் போனது. அப்போது இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இருதரப்புமே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வாக்கெடுப்பில் 29 வாக்குகள் வித்தியாசத்தில் கல்யாண்சிங் பெரும்பான்மையை நிரூபித்தார். அப்போது வாக்குச் சீட்டில் எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை நிரப்பி கையெழுத்திட்டு கொடுத்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்குகளில் இது முன்மாதிரியான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

2005-ல் ஜார்க்கண்ட்
2005-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் அர்ஜூன் முண்டா தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநராக இருந்த சையது ராஸி, காங்கிரஸ் கூட்டணியின் சிபுசோரனை ஆட்சி அமைக்க அழைத்தார். அப்போது உச்சநீதிமன்றத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. பெரும்பான்மையை சிபுசோரன் நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சிபுசோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுவிட அர்ஜூன் முண்டா முதல்வராகி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றார்.

2016-ல் உத்தரகாண்ட்
2016-ல் உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸின் ஹரீஷ் ராவத் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கு ஒருநாள் முன்னதாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப், ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்து ஹரீஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஹரீஷ் ராவத் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்.

2017-ல் கோவா
2017-ல் கோவாவில் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவின் மனோகர் பாரிக்கரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர் மிருதுளா சின்ஹா. இத்தனைக்கும் அப்போது காங்கிரஸ் 17 இடங்களில் வென்ற தனிப்பெரும் கட்சி. ஆனாலும் 13 இடங்களில் வென்ற பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கோவா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. அதில் பாஜகவின் மனோகர் பாரிக்கர் வென்றார்.

2018-ல் கர்நாடகா
2018- கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். எடியூரப்பாவும் முதல்வராக பொறுப்பேற்றார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து எடியூரப்பாவை பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்தார்.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு
தற்போதைய மகாராஷ்டிரா அரசியல் நிலவரமும் கடந்த ஆண்டு கர்நாடகா நிலவரமும் ஒரே மாதிரியாக உள்ளன. தற்போது பாஜகவின் பட்னாவிஸ் அரசு நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நேரடியாக டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications