"இப்போது நம்மிடையே ஒன்றல்ல.. 2 பெருந்தொற்றுகள் உள்ளன.." டாப் ஆய்வாளர் வார்னிங்.. இது தான் காரணமாம்
டெல்லி: ஓமிக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஐசிஎம்ஆரின் முன்னாள் தலைவர் டாக்டர் டி ஜேக்கப் ஜான் இது குறித்து முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உலகின் அனைத்து நாடுகளுக்கும் இப்போது ஓமிக்ரான் கொரோனா தான் தலைவலியைத் தருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் என பல்வேறு நாடுகளிலும் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந்து வருகிறது.
இந்தியாவிலும் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் 2.5 லட்சத்தைக் கடந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தினசரி கேஸ்கள் மிக அதிகமாக உள்ளது.

ஓமிக்ரான்
முந்தைய கொரோனா வகைகளைக் காட்டிலும் ஓமிக்ரான் மின்னல் வேகத்தில் பரவுவதால் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், அதேநேரம் டெல்டா, ஆல்பா கொரோனாவகைகளை விட ஓமிக்ரான் பெரும்பாலும் லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஓமிக்ரான் குறித்து பல்வேறு ஆய்வுகளும் நடந்து வரும் சூழலில் ஐசிஎம்ஆரின் முன்னாள் தலைவர் டாக்டர் டி ஜேக்கப் ஜான் இது குறித்து முக்கிய தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

எப்படி தோன்றியது
இது குறித்து டாக்டர் டி ஜேக்கப் ஜான் கூறுகையில், "பெந்தொற்றை தொடக்கிய சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா, ஆல்பா, பீட்டா, டெல்டா, காப்பா ஆகியவற்றில் இருந்து ஓமிக்ரான் நேரடியாக உருமாற்றம் அடையவில்லை. இது எப்படி, எதில் இருந்து உருமாற்றம் அடைந்தது என நமக்கு உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும், சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனாவுக்கும் ஓமிக்ரானுக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.

2 பெருந்தொற்றுகள்
இதுவரை கொரோனா வைரஸ் ஒரு குறிப்பிட்ட முறையில் உருமாற்றம் அடைந்து பரவி வந்தது. ஆனால், இந்த ஓமிக்ரான் அந்த முறையைப் பின்பற்றவில்லை. இதனால், தற்போது ஒன்றல்ல இரண்டு பெருந்தொற்றுகள் பரவி வருகிறது என்றே நாம் நினைக்க வேண்டும். ஒன்று டெல்டா மற்றும் அத்துடன் இருக்கும் வேரியண்ட்களால், மற்றொன்று ஓமிக்ரான் மற்றும் அதில் இருந்து தோன்றும் உருமாறிய கொரோனா வகைகளால்!

இது தான் காரணம்
இதனால் தான் ஓமிக்ரான் கொரோனாவை நம்மால் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய முடிகிறது. மேலும், ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறுபட்ட அறிகுறிகள் இருப்பதற்கும் இதுவே காரணம். கடந்த காலத்தில் பரவிய சுவாச மண்டலத்தைப் பாதித்தது. ஆனால், ஓமிக்ரான் கொரோனா பெரும்பாலும் தொண்டைப் பகுதியைப் பாதிக்கிறது. இந்த ஓமிக்ரான் வேகமாகப் பரவுவதால் முதலில் பெருநகரங்களில் தான் ஓமிக்ரான் உச்சமடைந்து மீண்டும் குறையத் தொடங்கும்" என்று தெரிவித்தார்.
Recommended Video

ஆக்ஸ்போர்டு பேராசிரியர்
சமீபத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் பெல்லும் கூட ஓமிக்ரான் முந்தைய கொரோனா வகைகளைப் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை எனத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவ. மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வேக்சின் பெரும்பாலும் லேசான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் கூட, அவை வேக்சின் போட்டுக்கொள்ளாதவர்கள் மத்தியில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications