டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அல்வா கிண்டியாச்சு.. பட்ஜெட் வேலைகள் ஆரம்பிச்சாச்சு.. சலுகைகள் அறிவிக்கப்படுமா?

Google Oneindia Tamil News

டெல்லி:டெல்லியில் பட்ஜெட் தாக்கலுக்கான அல்வா தயாரிப்பு பணியில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவருடன் சக அமைச்சர்களும் பங்கேற்றனர்.

ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு டெல்லியில் இருக்கும் நிதி அமைச்சகத்தின் வடக்கு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி அமைச்சர் அல்வா கிண்டி தருவது வழக்கம். இப்போது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்யும் போதும் பழங்கால நடைமுறையான இதனை பின்பற்றப்படுவது உண்டு.

பட்ஜெட் பேப்பர்களை பிரிண்ட்டிங் செய்யும் நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்றாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பதில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு அலுவலகரும், பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வரை நிதி அமைச்சகத்திலேயே தான் தங்க வேண்டும்.

கடும் கட்டுப்பாடுகள்

கடும் கட்டுப்பாடுகள்

அவர்களுக்கு என்று குறிப்பிட்ட தொலைபேசி அளிக்கப்பட்டிருக்கும். அந்த குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்துதான் அவர்கள் தமது குடும்பத்தினாருடன் மட்டும் தான் அவர்கள் பேச வேண்டும் என கட்டுப்பாடுகளும், நடைமுறைகளும் உள்ளன.

கடந்த வருடம் அல்வா

கடந்த வருடம் அல்வா

கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பே (ஜனவரி 20) அல்வாவை கிண்டி, பட்ஜெட் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுக்கு அளித்தார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. இந்த வருடமும் அதே பிப்ரவரி 1ம் தேதியன்று, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது நிதி அமைச்சகம்.

அல்வாவின் ரகசியம்

அல்வாவின் ரகசியம்

இந்தியாவில் பட்ஜெட்டின் போது ஏன் அல்வா கிண்டுகிறார் என்பதற்கு சுவாரசிமயான பல சங்கதிகள் உள்ளன. சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டினை குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரிண்ட் செய்து தாக்கல் செய்யப்பட்டது.

தகவல்கள் பரவின

தகவல்கள் பரவின

1950ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பட்ஜெட் தகவல்கள் பரவத் தொடங்கி... பின்னர் அது பல குழப்பங்களில் கொண்டுபோய் முடிந்தது. அது போன்று நிகழ்வுகள் வரும்காலங்களில் தடுப்பதற்காக தற்போது மத்திய அரசு செயலகத்தில் இயங்கி வரும் நிதி அமைச்சகத்திலேயே அச்சகம் உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

வெளியுலக தொடர்பு துண்டிப்பு

வெளியுலக தொடர்பு துண்டிப்பு

பட்ஜெட் ப்ரிண்டிங் தொடங்கி தாக்கல் செய்யப்படும் வரை 120 பணியாளர்கள் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருவார்கள். அவர்களுக்கு வெளி உலக தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். அமைச்சகத்திற்குள் சென்று வீடு திரும்பும் உரிமை நிதி அமைச்சருக்கு மட்டும் தான் உண்டு.

அமைச்சர் கலந்துகொண்டார்

11 நாட்கள் வேலைப்பளுவில் சிக்கித் தவிக்கும் பணியாளர்களை உற்சாகப் படுத்தவே இந்த அல்வா தயாரித்து வழங்கப்படுகிறது. அதுபோல இந்தாண்டும் பட்ஜெட் தயாரிக்கும் பணிகளுக்கு முன்பாக அல்வா தயாரிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவருடன் சக அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் அமைச்சரவையில் உள்ள சக அமைச்சர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

அருண் ஜெட்லி ஆப்சென்ட்

அருண் ஜெட்லி ஆப்சென்ட்

அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. மத்தியில் ஆளும் பாஜகவின் கடைசி பட்ஜெட் என்பதால் தேர்தலை முன்னிட்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் இடம்பெறும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

English summary
Kicking off the printing of the official budget documents, finance ministry officials organised the customary 'halwa ceremony'. The interim budget to be presented by the government on February 1.This is the first time since the NDA government took over that Finance Minister Arun Jaitley could not be present for the event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X