மஹுவா மொய்த்ரா எம்பி ரகசிய திருமணம்.. 65 வயது நபரை ஜெர்மனியில் மணந்தார்.. யார் இந்த பினாகி மிஸ்ரா?
டெல்லி: மேற்குவங்க முதல்வர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பியான மஹூவா மொய்த்ரா தனது 50 வயதில், உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், பிஜு ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்பியுமான 65 வயது நிரம்பிய பினாகி மிஸ்ராவை ஜெர்மனியில் ரகசிய திருமணம் செய்தார். இவர்கள் 2 பேரும் சேர்ந்து கேக் வெட்டி நடனமாடிய வீடியோ வெளியாகி உள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. இவர் மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக உள்ளார். இவர் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர்.

மஹுவா மொய்த்ராவுக்கு, லார்ஸ் பிரார்சன் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மஹுவா மொய்த்ரா - லார்ஸ் பிரார்சன் ஆகியோர் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில் தான் மஹுவா மொய்த்ரா ஜெர்மனியில் வைத்து ரகசியமாக 2வது திருமணம் செய்துள்ளார். இவரது திருமணம் கடந்த 3ம் தேதி ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடந்துள்ளது. பினாகி மிஸ்ரா என்ற 65 வயது நபரை மஹுவா மொய்த்ரா கரம் பிடித்தார். பினாகி மிஸ்ரா ஒடிசாவின் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சியை சேர்ந்த மாஜி எம்பியாவார்.
இந்த திருமணம் மிகவும் ரகசியமாக நடந்து முடிந்தது. மஹுவா மொய்த்ரா - பினாகி மிஸ்ரா ஆகியோரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்நிலையில் தான் தற்போது மஹுவா மொய்த்ரா - பினாகி மிஸ்ரா ஆகியோர் சேர்ந்து நடனமாடும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. பாலிவுட்டின் கிளாசிக் பாடலான "Raat Ke Humsafar" பாடலுக்கு இருவரும் நடனமாடினர். இந்த வீடியோவை பார்ப்போர் இந்த புதிய ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.
மஹுவா மொய்த்ரா கரம்பிடித்துள்ள பினாகி மிஸ்ரா ஒடிசாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். இவர் முதலில் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டார். அதன்பிறகு ஒடிசாவின் மாஜி முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் கட்சியில் இணைந்தார். தற்போதும் அந்த கட்சியில் தான் உள்ளது. இவர் முதல் முறையாக கடந்த 1996ம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் புரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் புரி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக செயல்பட்டு வந்தார்.
அதேபோல் மஹுவா மொய்த்ரா கடந்த 1974ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார். இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். முதலீட்டு வங்கியாளராக இருந்த அவர் அரசியலில் நுழைந்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 2010ல் இருந்து வேகமாக வளர தொடங்கினார். தனது ஆக்ரோஷமான பேச்சால் அரசியலில் வேகமாக முன்னேறினார். கடந்த 2019ல் முதல் மறையாக மேற்கு வங்க மாநில கிருஷ்ணாநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை நாடாளுமன்றத்தில் விமர்சனம் செய்தார். அதன்பிறகு மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற இ-மெயிலில், தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தினி என்பவரை கேள்வி எழுப்ப அனுமதித்து ஆதாயம் அடைந்த குற்றச்சாட்டில் கடந்த 2023ம் ஆண்டு எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு மீண்டும் கடந்த 2024ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உள்ள நிலையில் பினாகி மிஸ்ராவை 2வது திருமணம் செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications