நல்லா பாருங்க.. இதுதான் புது 20 ரூபாய் காயின்.. அழகான அசோக ஸ்தூபி.. கூடவே சத்யமேவ ஜெயதே!
டெல்லி: பத்து ரூபாய் நாணயங்களைப் போல், 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட இருபது ரூபாய் நாணயங்களும் தற்போது புழக்கத்திற்கு வர தொடங்கியுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு பத்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. இந்நிலையில் புதிய 20 ரூபாய் நாணயத்தையும் கடந்த 2019ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் 10 ரூபாய் நாணயங்களை பல இடத்திலும் செல்லாது என்று சொல்வதால், மக்கள் தங்களிடம் இருக்கும் 10 ரூபாய் நாணயங்களை வங்கிகளில் கொடுத்து வருகின்றனர். 10 ரூபாய் நாணயம் செல்லும் என ரிசர்வ் வங்கி தொடர்ந்து கூறிவருவதை பலரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

நாணயம்
இந்த 20 ரூபாய் நாணயம் கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். கொரோனா காலத்தில் ஏற்பட்ட லாக்டவுனால் ஒரு வருடம் கழித்தே மக்களின் கைகளுக்கு சென்று சேர்ந்தது. அப்போதே மத்திய அரசு பார்வையற்றவர்களும் எளிதாக நாணயங்களைப் பயன்படுத்தும் வகையில் புதிய 1, 2, 5, 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.

20 ரூபாய் நாணயம்
இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் இந்த 20 ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயங்கள் புழங்கும் இடமாக இருப்பது மும்பை. இந்த ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு மண்டல அலுவலகம் மூலமாக இந்த புதிய நாணயங்கள் பிரித்து வழங்கப்பட இருக்கிறது என நாணய சேகரிப்பாளர் மகேஷ் ஜெயின் கூறியுள்ளார்.

டிசைன்
இந்த 20 ரூபாய் நாணயம் காப்பர், சின்க், நிக்கலால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்துக்கு 12 மூலைகள் இருக்கிறது. கிட்டத்தட்ட 8.50 கிராம் எடையுடன் இந்த நாணயம் தயாரிக்கப்பட்டுள்ளது என நிதித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் 65% காப்பரும், 15% சின்கும், 20% நிக்கலும் சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. 10 ரூபாய் நாணயத்தின் உயரத்தில், இரண்டு ரூபாய் நாணயத்தை இரண்டு நாணயங்கள் சேர்த்து வைத்தால் எப்படி இருக்குமோ, அதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளைப் பெருமைபடுத்த, தானியங்கள் இடம்பெற்றுள்ளன.

அசோக ஸ்தூபி
இரண்டு நிறத்தில் இந்த நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. உள் வட்டத்தில் வெளிர் தங்க நிறத்தில் இருக்கும்படியும் வெளி வட்டத்தில் வெள்ளை நிறமும் இருக்கும்படியும் இந்த நாணயம் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அதோடு அசோக ஸ்தூபி இடம் பெற்றுள்ளது. 'சத்யமேவ ஜெயதே' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மற்றொரு இடத்தில் இந்தியில் 'பாரத்' என்றும் ஆங்கிலத்தில் இந்தியா என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

பார்வைக் குறைபாடு
பார்வைக் குறைபாடு இருப்பவர்கள் எளிதில் இந்த நாணயத்தை அடையாளம் காணும்படி இந்த நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற நாணயங்கள் போல், இதுவும் பார்வை குறைபாடு உள்ளோருக்கும் உதவியாக இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தற்போது அதிக அளவில் 2 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருக்கின்றன. 10 ரூபாய் நாணயம் செல்லுமா செல்லாதா என்ற குழப்பத்தில் இருக்கும் நிலையில், 20 ரூபாய் நாணயம் பெரிய அளவில் புழக்கத்தில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே 20 ரூபாய் நாணயத்தைப் பார்க்க முடிகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications