டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுதான் நம்ம சர்கார்.. டெல்லியில் சர்கார் பாணியில் பேசிய டிவிட்டர் சிஇஓ.. விஜய் ரசிகரோ?

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி வந்த டிவிட்டர் CEO ஜாக் டோர்ஸி-வீடியோ

    டெல்லி: சர்கார் பட பாணியில் டிவிட்டர் தலைமைச் செயல் அதிகாரி (C.E.O) ஜாக் டோர்ஸி தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து டெல்லியில் பேசியுள்ளார்.

    முக்கிய சமூக வலைத்தளமான டிவிட்டரின் தலைமை செயலதிகாரி ஜாக் டோர்ஸி தற்போது இந்தியா வந்துள்ளார். கடந்த 9ம் தேதி வந்த அவர் 5 நாட்கள் இந்தியாவில் இருப்பார்.

    இந்த நிலையில் இந்தியாவில் உள்ள சில முக்கிய தலைவர்களை, மாணவர்களை அவர் இந்த பயணத்தில் சந்திக்க உள்ளார்.

    [ஸ்பைடர் மேன், அயர்ன் மேனை உருவாக்கிய ஸ்டான் லீ.. மார்வெலின் பிதாமகன் காலமானார்!]

     முக்கிய நோக்கம் என்ன

    முக்கிய நோக்கம் என்ன

    இது ஜாக்கின் முதல் இந்திய பயணம் ஆகும். இந்திய தேர்தல் குறித்தும், பொய்யான செய்திகள் பரவுவதை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்த அவர் இந்தியா வந்துள்ளார். அதேபோல் மாணவர்களிடையே அவர் உடையாடும் நிகழ்ச்சிகளும் அரங்கேறியது.

     ராகுல் காந்தியை சந்தித்தார்

    ராகுல் காந்தியை சந்தித்தார்

    இந்த நிலையில்தான் நேற்று அவர் ராகுல் காந்தியை சந்தித்தார். ஜாக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் சுமார் இரண்டு மணி நேர உரையாடினார்கள். பொய்யான தேர்தல் பிரச்சாரம், பொய்யான ஹேஷ்டேக் வைரல், போலி செய்திகளை பரவுவதை தடுப்பது எப்படி என்று பல விஷயங்கள் குறித்து இவர்கள் பேசியுள்ளனர்.

     விவாதம் செய்தார்

    விவாதம் செய்தார்

    அதேபோல் ஜாக் அதன்பின் டெல்லி ஐஐடியில் பேசினார். மாணவர்கள் முன்னிலையில் பல சுவாரசியமாக விஷயங்களை பேசினார். டிவிட்டர் தொழில்நுட்பம் குறித்தும் நிறைய தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். தான் சிஇஓ ஆன கதையை கூறினார்.

     சர்கார் பட பாணி

    சர்கார் பட பாணி

    இவர் டெல்லியில் பேசுவதற்காக 18 வயதின் சக்தி என்று பொறுப்படும் வகையில் #PowerOf18 என்ற டேக் உருவாக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்த அவர், இளைஞர்கள், மக்கள் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த டேக்கை உருவாக்கி இருப்பதாக ஜாக் கூறினார். சர்கார் படத்திலும் வெளிநாட்டில் இருந்து வரும் கார்ப்ரேட் சிஇஓவான விஜய்தான் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Twitter CEO talks like Sarkar Vijay asks Youth to Cast their Vote.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X