டெல்லி ஆட்சிக்கு ஆபத்து? சில ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.. எகிறும் டென்ஷன்!
டெல்லி: ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சி பேரத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு வந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலால் சில எம் எல் ஏக்களை தொடர்பு கொள்ள முடியாததால் டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக சிபிஐ பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது.
நாடு முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக இந்த விவகாரம் பேசப்பட்டது.

எம். எல். ஏக்களுக்கு அழைப்பு
இது ஒருபுறம் இருக்க மற்றொரு பக்கம் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா, பேரத்தில் ஈடுபடுவதாகவும் மிரட்டுவதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, கெஜ்ரிவாலின் இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெற இருந்தது.

சிறப்பு சட்டசபை கூட்டம்
இந்தக் கூட்டத்தில் தற்போதைய பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் சமீபத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆம் ஆத்மி கட்சியினருக்கு எதிரான நடத்திய சோதனைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்கிடையே, சிறப்பு சட்டசபை கூட்டத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

பெரும் பரபரப்பு
இதற்கிடையே இன்று காலை கூட்டம் நடைபெறும் நிலையில், சில எம்.எல்.ஏக்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் டெல்லி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென எம்.எல்.ஏக்களை தொடர்பு கொள்ள முடியாததால் இது பாஜனதாவின் செயலாக இருக்கும் என கூறப்படுகிறது.

53 எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் திட்டமிட்டபடி இன்று காலை 11 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கியது. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மொத்தம் உள்ள 62 எம்.எல்.ஏக்களில் 53 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவு பெற்றதாக ஆம் ஆத்மி கட்சி வட்டார தகவல்கள் கூறுகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications