Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் குறைந்து வரும் வேலையில்லா திண்டாட்டம்.. திருச்சி சிவா கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்ட எம்பிக்கள் கேட்ட கேள்விக்கு, ‛‛இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்து வருகிறது'' என நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் புள்ளிவிபரங்களோடு மத்திய அமைச்சர் ராமேஸ்வர் டெலி பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் இந்தியாவில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதில் மத்திய அரசு தவறி விட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றன.

ஆனால் இதனை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்து வருகிறது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளதாக தொடர்ந்து மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

திருச்சி சிவா கேள்வி

திருச்சி சிவா கேள்வி

இந்நிலையில் தான் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் கேட்கும் கேள்விக்கு மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம் தொடர்பாக ராஜ்யசபா எம்பிக்களான திமுகவின் திருச்சி சிவா கேள்வி கேட்டு இருந்தார். இதேபோல் எம்பிக்கள் சுஜீத் குமார்,ரஜனி பாட்டீல், அமி யாக்னிக் ஆகியோரும் கேள்விகள் கேட்டு இருந்தனர்.

மத்திய அமைச்சர் பதில்

மத்திய அமைச்சர் பதில்

இதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் இணை அமைச்சரான ராமேஸ்வர் டெலி பதிலளித்தார். அப்போது இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும் அதற்கான புள்ளி விபரங்களையும் அவர் கூறி இருந்தார். அதாவது மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் சார்பில் எடுக்கப்பட்ட பிஎல்எப்எஸ் (periodic Labour Force Survey or PLFS) சர்வேயின் புள்ளிவிபரங்களை தெரிவித்தார்.

குறையும் வேலையில்லா திண்டாட்டம்

குறையும் வேலையில்லா திண்டாட்டம்

அதன்படி 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கான வேலையின்மை விகிதம் முறையே 5.8 சதவீதம், 4.8 சதவீதம், 4.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் வேலையில்லா திண்டாட்டம் குறைந்து வருவதை காட்டுகிறது. மேலும் கிராமப்புறங்களை பொறுத்தமட்டில் 2018-19ல் 5 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம், 2019-20ல் 3.9 சதவீதமாகவும், 2020-21ல் 3.3 சதவீதமாகவும் சரிந்துள்ளதாக தெரிவித்தார்.

 வேலைவாய்ப்புக்கான திட்டம்

வேலைவாய்ப்புக்கான திட்டம்

மேலும் நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆத்மாநிர்பர் பாரத் திட்டம், ரோஸ்கர் யோஜனா, முத்ரா யோஜனா,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்பட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது'' என்றார்.

நாகலாந்தில் அதிகம்

நாகலாந்தில் அதிகம்

மேலும் மத்திய அமைச்சர் வெளியிட்ட புள்ளவிபரத்தின் அடிப்படையில் 2020-21ம் ஆண்டில் மாநிலம் வாரியாக பார்த்தால் வேலையில்லா திண்டாட்டமானது அதிகபட்மாக நாகலாந்தில் 19.2 சதவீதமாக இருந்தது. அதற்கு அடுத்ததாக லட்சத்தீவில் 13.4 சதவீதமாகவும், டெல்லியில் 10.5 சதவீதமாகவும், கேரளாவில் 10.1 சதவீதமாகவும், அந்தமான் & நிக்கோபார் தீவில் 9.1 சதவீதமாக இருந்தது. குறைந்தபட்சமாக சிக்கிமில் வேலையில்லா திண்டாட்டம் என்பது 1.1 சதவீதமாக மட்டுமே உள்ளது. மேகாலயா 1.7 சதவீதமாகவும், மத்தியப் பிரதேசத்தில் 1.9 சதவீதமாகவும் உள்ளது என்றார்.

 தமிழ்நாட்டில் எவ்வளவு?

தமிழ்நாட்டில் எவ்வளவு?

2020-21ம் ஆண்டு புள்ளி விபரப்படி தென் இந்தியாவை பொறுத்தமட்டில் கேரளாவில் வேலையின்மை அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு உள்ளது. அதன்படி கேரளாவில் வேலையில்லா திண்டாட்டம் 10.1 சதவீதமாக உள்ளது. அதற்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் வேலையின்மை என்பது 5.2 சதவீதமாக உள்ளது. இது தெலங்கானாவில் 4.9 சதவீதமாகவும், ஆந்திராவில் 4.1 சதவீதமாகவும், கர்நாடகத்தில் 2.7 சதவீதமாகவும் உள்ளது என்பது மத்திய அமைச்சர் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+