டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கர்நாடகாவிற்கு 5300 கோடி! நிர்மலா அள்ளி கொடுத்த அணைக்கட்டு திட்டம்.. தேர்தல் என கோஷமிட்ட எம்.பிக்கள்

கர்நாடகாவில் பத்ரா மேலணை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கர்நாடகாவில் பத்ரா மேலணை திட்டத்திற்கு ரூ 5,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் இந்த ஆண்டு நடைபெறும் கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்காக என கோஷமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

2023- 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் 5ஆவது பட்ஜெட் இது. அது போல் இந்த ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டும் இதுதான். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது.

பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசுகையில் 2023-2024 இல் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவீதமாக இருக்கும் என்றார். மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை மத்திய அரசு நியமிக்க உள்ளது.

அத்தனை மக்களின் எதிர்பார்ப்பும் ஒன்றுதான்.. அடித்து கூறும் சர்வே! எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா பட்ஜெட்அத்தனை மக்களின் எதிர்பார்ப்பும் ஒன்றுதான்.. அடித்து கூறும் சர்வே! எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா பட்ஜெட்

ஆவாஸ் யோஜனா திட்டம்

ஆவாஸ் யோஜனா திட்டம்

பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு 2024 ஆம் ஆண்டு நிதியாண்டில் கூடுதலாக ரூ 79 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது 66 சதவீதம் அதிகம். நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்கும் விதமாக கர்நாடகாவில் வறட்சியான பகுதிகளில் பத்ரா மேலணை திட்டத்திற்காக ரூ 5,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் கோஷம்

எதிர்க்கட்சிகள் கோஷம்

இந்த ஆண்டு நடைபெறும் கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்காக என எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. கர்நாடகா மாநிலத்தில் வறட்சிக்குள்ளாகும் பகுதிகளுக்கு நீர் கிடைக்க பத்ரா மேலணை திட்டம் கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ 21,470 கோடியாகும். இதற்கான ஒப்புதலை மத்திய நிதியமைச்சகத்திடம் கடந்த 2020 ஆம் ஆண்டு மாநில அரசு கோரியது.

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

மத்திய நீர்ப்பாசன துறை அமைச்சகத்தின் தொழில்நுட்ப பிரிவு ரூ 16,125 கோடி மதிப்பில் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியது. இந்த நிலையில் பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என மாநில அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கை

கோரிக்கை

மாநில அரசின் கோரிக்கையை பரிசீலனை செய்துள்ள மத்திய அரசு இந்த கோப்புகளை முதலீடு அனுமதி வாரியத்தின் பரிசீலனைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு அனுப்பியது. அது தொடர்பாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Budget 2023- 2024: FM Nirmala Sitharaman announces financial assistance for Upper Badra project for micro irrigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X