உங்க வீட்டில் முதியவர்கள் இருக்காங்களா? பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் சொன்ன செம அறிவிப்பு.. சிக்ஸர்
டெல்லி: பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் மற்றும் முதலீடுகளை வைத்திருக்கும் சிறு முதலீட்டாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், மத்திய பட்ஜெட் 2026-இல் ஒரு முக்கிய அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், வரி விலக்கு படிவங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறை இனி டிஜிட்டல் முறையில் எளிமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால், காலங்காலமாக இருந்த ஒரு நடைமுறைச் சிக்கலைத் தீர்த்துள்ளது. இதன் மூலம் தேவையற்ற வரி பிடித்தம் தவிர்க்கப்பட்டு, ரீஃபண்ட் (Refund) கோரும் நிலையும் குறையும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பட்ஜெட் அறிவிப்பு - ஒரே ஒரு முறை சமர்ப்பித்தால் போதும்!
பொதுவாக, வங்கிக் வைப்பு நிதி அல்லது பங்குகளின் ஈவுத்தொகை (Dividend) மூலம் கிடைக்கும் வருமானம், வரி விலக்கு வரம்பிற்குள் இருந்தால், அந்த வருமானத்தில் வரி பிடித்தம் (TDS) செய்யாமல் இருக்க 15G அல்லது 15H படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை, ஒரு முதலீட்டாளர் பத்து வெவ்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தால், அந்த பத்து நிறுவனங்களுக்கும் தனித்தனியாகப் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இது மிகுந்த நேரத்தை விரயம் செய்வதோடு குழப்பத்தையும் ஏற்படுத்தி வந்தது.
இந்தச் சிரமத்தைப் போக்க, "முதலீட்டாளர்கள் இனி தங்களது 15G அல்லது 15H படிவங்களை 'டெபாசிட்டரிகளிடம்' (Depositories) மட்டும் சமர்ப்பித்தால் போதும்; அவர்களே அந்தந்த நிறுவனங்களுக்கு நேரடியாகப் படிவங்களை அனுப்பிவிடுவார்கள்" என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் முடிவு - மூத்த குடிமக்களுக்குக் கிடைக்கும் நிம்மதி
இந்த மாற்றத்தை வரி ஆலோசகர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர். இது குறித்து பல்வேறு மூத்த சிஏ மற்றும் வருமான வரி ஆலோசகர்கள் கூறுகையில், "இது மூத்த குடிமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவையற்ற காகித வேலைகளைக் குறைப்பதோடு, தவறுதலாக வரி பிடித்தம் செய்யப்படுவதையும் இது தவிர்க்கும். குறிப்பாக, வட்டி வருமானம் மற்றும் ஈவுத்தொகையை மட்டுமே நம்பியிருக்கும் முதியவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்," என்றுள்ளார்.
பல்வேறு வருமான வரி ஆலோசகர்கள் கூறுகையில் கூறுகையில், "இது காலங்காலமாக இருந்த ஒரு நடைமுறைச் சிக்கலைத் தீர்த்துள்ளது. இதன் மூலம் தேவையற்ற வரி பிடித்தம் தவிர்க்கப்பட்டு, ரீஃபண்ட் (Refund) கோரும் நிலையும் குறையும்," எனத் தெரிவித்தனர்.
15G மற்றும் 15H: யாருக்கு எது?
இந்த வசதியைப் பெற சில அடிப்படைத் தகுதிகள் அவசியமாகும்:
படிவம் 15G: 60 வயதிற்குட்பட்ட தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUF) இதைப் பயன்படுத்தலாம். ஆண்டு மொத்த வருமானம் அடிப்படை வரி விலக்கு வரம்பிற்குள் இருந்தால் மட்டுமே இதைச் சமர்ப்பிக்க முடியும்.
படிவம் 15H: 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கானது. அந்த நிதியாண்டில் அவர்களது மொத்த வரிப் பொறுப்பு 'பூஜ்ஜியம்' (Zero Tax Liability) எனில் இதைப் பயன்படுத்தலாம்.
அரசின் இந்த டிஜிட்டல் முன்னெடுப்பு, வரி நடைமுறைகளை எளிதாக்குவதோடு, தகுதியுள்ள முதலீட்டாளர்களுக்குச் சரியான நேரத்தில் பலன்கள் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.












Click it and Unblock the Notifications