கோவை தொழில்துறையினருக்கு குட் நியூஸ்.. மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் MSME எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் முக்கியமா இடத்தைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டிலும் திருப்பூர், கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஏகப்பட்ட MSME நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்தத் துறைக்கும் மத்திய பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வது இது 9வது முறையாகும்.

இந்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், MSME எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன துறைக்கு ₹10,000 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
அவர் மேலும், "200 பழமையான தொழிற்சாலைக் குழுமங்களைப் புதுப்பித்து, ₹10,000 கோடி SME வளர்ச்சி நிதியை அறிமுகப்படுத்துகிறேன்.. மைக்ரோ நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க தற்சார்பு இந்தியா நிதியை ₹2,000 கோடி உயர்த்த முன்மொழிகிறேன்" என்றார்.
அமெரிக்க அதிபர் டிரம்ரின் வரி அறிவிப்பால் இந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தான் நேரடியாகப் பாதிக்கிறது. அந்தத் துறைக்கு உதவும் வகையிலேயே நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
முந்தைய 2025 பட்ஜெட் அறிக்கையின்படி, உத்யம் இணையதளத்தில் 5,93,38,604 எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பதிவாகியுள்ளன. இவை பெரும்பாலும் மைக்ரோ பிரிவில் உள்ளன. இத்துறை 25.18 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணிசமான பங்களிப்பை அளித்து வருகிறது.
கடந்த சில பட்ஜெட்களாகவே, எம்எஸ்எம்இ வளர்ச்சிக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. கடந்தாண்டு, சீதாராமன் எம்எஸ்எம்இகளை 'வளர்ச்சியின் இரண்டாவது இயந்திரமாக' குறிப்பிட்டார். இந்தியாவை உலக உற்பத்தி மையமாக்குவதில் அவற்றின் பங்கை அவர் வலியுறுத்தி, கடன் அணுகல், சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் கடந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளித்தது.
தமிழ்நாட்டிலும் திருப்பூர், கோவை உள்ளிட்ட பல இடங்களில் ஏகப்பட்ட MSME நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அவர்களுக்கு இந்த அறிவிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications