Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லை பாதுகாப்பு ஒப்பந்த மீறல்-சீனா பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூவிடம் ராஜ்நாத்சிங் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எல்லையில் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்களை மீறக் கூடாது என டெல்லியில் தம்மை சந்தித்த சீனா பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாங்ஃபூவிடம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தினார்.

Recommended Video

    India-க்கு Jet Engine அவசரம்! கொக்கி போடும் 3 நாடுகள் | AMCA| America-க்கு Shock கொடுத்த Argentina

    டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விடுத்த அழைபின் பேரில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும் வருகை தந்துள்ளனர்.

    Union Defence Minister Rajnath Sing meets China Defence Minister Li Shangfu

    இம்மாநாட்டில் பங்கேற்ற கஜகஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கர்னல் ஜெனரல் ரஸ்லன் சசைலைக்கோவ் மற்றும் தஜிகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கர்னல் ஜெனரல் ஷெரலி மிர்சோவுடன் தனித்தனியே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பரஸ்பரம் இருதரப்பு நலன் சார்ந்த கூட்டாண்மையை விரிவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    அதேபோல ஈரான் பாதுகாப்பு அமைச்சர் முகமது ரேஸா கரே அஷ்தியானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். ந்த சந்திப்பின் போது இந்தியா - ஈரான் இடையேயான தொன்மை வாய்ந்த கலாச்சாரம், நாகரிகம், மொழி அடிப்படையிலான உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையேயான நட்புறவு குறித்து இரு தலைவர்களும் வலியுறுத்தினர். அதேபோல், ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை, அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள், எல்லைப் பாதுகாப்பு விவகாரம் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்வது பற்றியும் ஆலோசித்தனர்.

    மேலும் டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, சீனா பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்ஃபூ டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் இந்தியா - சீன எல்லை விவகாரம் குறித்தும் இரு தரப்பு நல்லுறவுக்கான மேம்பாடு குறித்தும் வெளிப்படையாக விவாதித்தனர்.

    Union Defence Minister Rajnath Sing meets China Defence Minister Li Shangfu

    மேலும் எல்லையில் அமைதி மற்றும் சமாதானத்திற்கு வித்திடுவதன் மூலமே இந்தியா - சீனா இடையேயான நல்லுறவை மேம்படுத்த முடியும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். எல்லை கட்டுப்பாட்டுக் கோடு சார்ந்த அனைத்து விவகாரங்களுக்கும், தற்போது அமலில் உள்ள இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் நிலைப்பாட்டிற்கு ஏற்ற வகையில் தீர்வு காண்பது அவசியம் என்றார். அமலில் உள்ள ஒப்பந்தத்தை மீறுவது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மீண்டும் வலியுறுத்திய ராஜ்நாத் சிங் அவ்வாறு செய்வதன் மூலம் எல்லையில் பதற்றத்தைத் தணிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+