Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா அணிக்கு பதிலடியாக தீவிரமாகும் "நமது அரசியல் சாசனம், நமது பெருமை" இயக்கம்- நாளை புதுவெப்சைட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "இந்தியா" கூட்டணியின் அரசியல் ஆயுதமாக "அரசியல் சாசனம்" உருமாறியிருப்பதால் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உரிய பதிலடி தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்ட நமது அரசியல் சாசனம்; நமது பெருமை இயக்கத்தின் 2-வது மண்டல மாநாடு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளை நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு முன்னரே இந்தியா கூட்டணி கட்சிகள் அரசியல் சாசனத்தை தேர்தல் ஆயுதமாக கையில் எடுத்தன. மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் அழிக்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் எழுதப்படும் பேரபாயம் இருப்பதாக இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வந்தன. இதுதான் லோக்சபா தேர்தல் களத்திலும் கடுமையாக எதிரொலித்தது. லோக்சபா தேர்தலில் 400 இடங்களுக்கும் மேல் வெல்வோம் என்ற பாஜகவின் நம்பிக்கையை தகர்த்து பெரும்பான்மைக்கான இடங்கள் கூட கிடைக்காமல் போனதற்கு இந்தியா கூட்டணி கட்சிகளின் 'அரசியல் சாசன' பிரசாரமும் ஒரு காரணம்.

constitution india

இந்தியா கூட்டணிக்கு பதில் தரும் வகையில்தான் 'ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்' இயக்கம்- ' நமது அரசியல் சாசனம், நமது பெருமை' என்ற இயக்கத்தை டெல்லியில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கடந்த ஜனவரி 24-ந் தேதி துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். இந்த இயக்கம் அரசியலமைப்பு தொடர்பாகவும், சட்ட உரிமைகள் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இந்த இயக்கத்தின் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் 18-வது லோக்சபா எம்பிக்களாகப் பதவியேற்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள், கையடக்க அரசியல் சாசனப் புத்தகத்துடன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதற்கு பதிலடியாக இந்தியாவில் அரசியல் சாசனம் முடக்கப்பட்டு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட 1975-ம் ஆண்டு எமர்ஜென்சியின் 50-வது ஆண்டை முன்னிட்டு ஜூன் 25-ந் தேதி ஆண்டுதோறும் அரசியல் சாசனப் படுகொலை நாளாக அனுசரிப்போம் என பிரகடனம் செய்தது மத்திய அரசு. இதனை இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஜனவரியில் தொடங்கி வைக்கப்பட்ட மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தின் நீதித்துறையின் நமது அரசியல் சாசனம், நமது பெருமை (ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்') கொண்டாட்டத்தின் 2-வது மண்டல நிகழ்வு நாளை உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள அலகாபாத் மருத்துவ சங்க மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு நிறைவை இது நினைவுகூருகிறது.

மேலும் மத்திய அரசின் மைகவ் (MyGov) இணைய தளத்தில் நடைபெற்ற இணையதளப் போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு, இந்த நிகழ்ச்சியின்போது பரிசுகள் வழங்கப்படும்.

மக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியாக, 'ஹமாரா சம்விதான் ஹமாரா சம்மான்' இணைய தளம் இந்த நிகழ்ச்சியின்போது தொடங்கி வைக்கப்படும். அரசியலமைப்பு, சட்ட உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தகவல்களை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு இந்த தளம் அறிவுக் களஞ்சியமாக செயல்படும்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால், அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் பன்சாலி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். வழக்கறிஞர்கள், நீதித்துறை அதிகாரிகள், பிரயாக்ராஜில் உள்ள ராஜேந்திர பிரசாத் தேசிய சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், சட்ட மாணவர்கள், மத்திய, மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+