மதத்தின் பெயரால் மக்களிடம் மோசடி.. பல லட்சம் ரூபாய் ஏப்பம்.. உ.பி.யில் நூதனம்
டெல்லி: இந்து தெய்வங்களின் சிலைகள் தங்கள் நிலத்தில் இருந்து வருவதாக கூறி பல லட்சம் ரூபாயை ஏமாற்றிய குடும்பத்தை உத்தரபிரதேச போலீஸார் கைது செய்தனர்.
அறிவியல் எவ்வளவு வளர்ச்சி அடைந்தபோதிலும், மதங்களின் பெயரைக் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்கள் நம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன.
அந்த மதம், இந்த மதம் என எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைத்து மதங்களிலும் இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகள் நிறைய இருக்கின்றனர். பில்லி சூனியம், நரபலி ஆகிய பயங்கர குற்றங்களும் இதன் நீட்சியாகவே அரங்கேறுகின்றன. இதுபோன்ற ஒரு சம்பவம்தான் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.

தோண்ட தோண்ட சாமி சிலைகள்
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள குக்ரி கிராமத்தைச் சேர்ந்தவர் அமர் யாதவ் (28). இவர் அங்குள்ள சந்தையில் சிறிய காய்கறி கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு காலை 7 மணியளவில் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கூச்சலிட்டு அழுதுக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரிடம் "ஏன் இப்படி அழுதுக் கொண்டிருக்கிறாய் எனக் கேட்டுள்ளனர்?" அதற்கு அவர், "இன்று நிலத்தை உழுதுக் கொண்டிருந்த போது பல இடங்களில் இருந்து விநாயகர், சிவன், பார்வதி, அனுமன் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. அதனால்தான் என்னை மறந்து அழுதுக் கொண்டிருக்கிறேன். எனது நிலத்தில் கோயில் எழுப்ப வேண்டும் என தெய்வங்கள் விரும்புகின்றன" எனக் கூறியிருக்கிறார்.

செங்கல் கோயில்
இதனை நம்பிய அவர்கள், அமர் யாதவின் நிலத்தில் இருந்து தெய்வங்களின் சிலைகள் தானாக வருகின்றன என அனைவரிடமும் கூறி இருக்கின்றனர். அவ்வளவுதான், சரியாக இரண்டு மணிநேரத்திற்குள் அமர் யாதவின் நிலத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் குவியத் தொடங்கினர். இதனை எதிர்பார்த்த அமர் யாதவ், அதற்குள்ளாக 4 செங்கற்களை எடுத்து வந்து அதன் மீது திருநீறும், குங்குமும் பூசி ஒரு சிறிய கோயிலை போல ஏற்பாடும் செய்துவிட்டார்.

குவிந்தது காணிக்கை
இதனை பார்த்ததுதான் தாமதம். உடனே கிராமத்தினர் அமர் உருவாக்கிய கோயிலுக்கு தங்கள் கையில் இருந்த பணத்தை காணிக்கையாக செலுத்தினர். பின்னர் இந்த தகவல் மேலும் பரவவே, அக்கம்பக்கத்து கிராமத்தினரும் அங்கு வந்து ஆயிரக்கணக்கில் பணமும், நகையையும் காணிக்கையாக செலுத்தினர். சிலர் அங்கு வந்து மொட்டை அடித்தும் சென்றனர். இதனால் 4 நாட்களிலேயே 2 லட்சம் ரூபாய் அமர் யாதவுக்கு கிடைத்தது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. அப்போது இதனை பார்த்த சிலர், எப்படி நிலத்திற்குள் இருந்து தானாக சாமி சிலைகள் வரும் எனக் கேள்வியெழுப்பினர். மேலும், கிராம மக்களை ஏமாற்றி இவர்கள் மோசடி செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

அமேசான் சிலைகள்
இந்த விவகாரம் பெரிதாகவே, இதுகுறித்து விசாரிக்குமாறு உன்னாவ் போலீஸாருக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். இதன்பேரில், அங்கு சென்று அமர் யாதவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிலைகளை 169 ரூபாய்க்கு அமேசானில் ஆர்டர் செய்து வாங்கியதும், பின்னர் அதனை நிலத்தில் புதைத்து வைத்து மக்களை ஏமாற்றி பணம் பறித்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து, அமர் யாதவ் உட்பட அவரது குடும்பத்தினர் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், மக்கள் கொடுத்த பணம், நகைகள் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கடவுளின் பெயரால் எதைக் கூறினாலும் நம்பும் மக்கள் இருக்கும் வரை, நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்கள் குறையாது என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த உதாரணம்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications