UPIக்கு தனியாக 18% ஜிஎஸ்டி.. ரூ.2,000க்கு மேல் MDR உடன் சேர்த்து வரியும் விதிப்பு? முக்கிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரூ.2,000க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டியும் தனியாக விதிக்கப்படும் என்ற தகவல் பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே யுபிஐ மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டியை இன்புட் வரி கிரெடிட்(ITC) மூலம் சரிசெய்துகொள்ள முடியும் என மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

இந்தியாவில் யுபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரிதக்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பல கோடி பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு அக்டோபர் 15 முதல் கட்டண விதிமுறை அமலுக்கு வர உள்ளது.

UPI Charges UPI

கூடுதல் கட்டணம்

இந்த கூடுதல் கட்டணத்தால் யுபிஐ பயன்பாடு குறைந்து, மக்கள் மீண்டும் அதிக அளவில் பணப் பரிவர்த்தனைகளுக்கு திரும்பக்கூடும் என்ற கவலைகளும் எழுந்துள்ளன. இருப்பினும், மத்திய அரசு வட்டாரங்கள் வேறு விதமாகவே இதை அணுகுகிறது.

அதாவது யுபிஐக்கு கட்டணம் என்பதால் பண பரிவர்த்தனைகள் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும், யுபிஐ பரிவர்த்தனைகளிலும் வீழ்ச்சி ஏற்படாது எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், யுபிஐ கட்டணத்திற்கு கூடுதலாக ஜிஎஸ்டி என்பது தொடர்பாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.

இன்புட் கிரெடிட்

இது தொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறுகையில், "யுபிஐ மீது ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்பது பொய்யான தகவல். இந்த கட்டணம் மீது செலுத்தப்படும் ஜிஎஸ்டியை இன்புட் வரி கிரெடிட் மூலம் சரி செய்துகொள்ள முடியும். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ஜிஎஸ்டி கவுன்சில் அதை கவனிக்கும். இந்த கூடுதல் கட்டணம் காரணமாக பண பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என நாங்கள் கருதவில்லை. அக்டோபர் 15க்குப் பிறகு யுபிஐ பரிவர்த்தனைகள் குறையும் எனவும் எதிர்பார்க்கவில்லை" என்றனர்.

வணிகர்களுக்கு மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகள், அதாவது மக்கள் கடைக்காரர்கள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு ரூ.2,000க்கு மேல் பணம் செலுத்தும்போது 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். அதேநேரம் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.300 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். ரயில்வே, தொலைத்தொடர்பு சேவைகள், காப்பீடு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளுக்கு ரூ.2,000க்கு மேல் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு விளக்கம்

மேலும், இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணமாக வசூலிக்காமல் இருப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்ட பிறகும் இதை தீவிரமாக கண்காணிப்போம் என அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இப்போது இணையத்தில் பரவும் தகவலே யுபிஐ கட்டணத்திற்கு மேல் கூடுதலாக 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்பதுதான். அதாவது 10,000 ரூபாய் அனுப்பினால் தனியாக 0.4% கட்டணம்.. மேலும், 18% ஜிஎஸ்டி என சொல்கிறார்கள். ஆனால், இதில் தான் முக்கிய விளக்கத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது. அதாவது இந்த ஜிஎஸ்டி என்பது முழு பரிவர்த்தனை தொகைக்கும் விதிக்கப்படாது. வணிகர்களிடம் வசூலிக்கப்படும் 0.4 சதவீத MDR தொகைக்கு மட்டுமே 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

கூடுதல் வருவாய்

இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "யுபிஐ கட்டணம் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.3,500 முதல் ரூ.4,000 கோடி வரை ஜிஎஸ்டி வருவாய் அரசுக்கு கிடைக்கக்கூடும் என மதிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஜிஎஸ்டி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட வணிகர்கள் செலுத்தும் வரியில் ஐடிசி எனப்படும் இன்புட் டாக்ஸ் கிரெடிட் கோர முடியும்" என்கிறார்கள்.

இதனால் பெரிய நிறுவனங்களுக்கு இந்த வரி தாக்கம் குறைவாகவே இருக்கும். ஏனெனில் கட்டணம் மீது செலுத்தப்படும் ஜிஎஸ்டியை ஐடிசி மூலம் சரிசெய்ய முடியும். அதேநேரம் ஜிஎஸ்டி அமைப்பில் பதிவு செய்யாத நிறுவனங்களுக்கே இது சிக்கலை தரலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+