யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு.. அசத்திய சென்னை பெண்.. கலக்கிய கோவில்பட்டி ராமகிருஷ்ணன்!!!
டெல்லி: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று (மே 23) வெளியாகி இருக்கும் நிலையில் தேசிய அளவிலான தரவரிசையில் சென்னை மாணவி ஜீஜீ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ண சாமி அகில இந்திய அளவில் முதல் 120 வது இடங்களுக்குள் உள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு பணிகளில் சேர யுபிஎஸ்சி எனப்படும் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் இன்று யுபிஎஸ்சி இறுதித் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன.

upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் தேசிய அளவில் முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்து இருக்கிறார்கள். இந்த தேர்வை எழுதியவர்களில் 933 பேர் தேர்ச்சி அடைந்ததாக யுபிஎஸ்சி தெரிவித்து இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 39 பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் அகில இந்திய அளவில் 107 வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார். அவர் பெயர் ஜீஜீ. சென்னை பெரும்பூரை சேர்ந்த அவர் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ண சாமி 107 வது இடத்தை பிடித்து உள்ளார். அதேபோல் சரவணன் என்பவர் 147 வது இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறார். இவர் புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அருண் என்பவர் 426 இடத்தையும், சென்னையை சேர்ந்த மதிவதனி இராவணன் என்ற பெண் 447 வது இடத்தை பிடித்து தேர்வில் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். கார்த்திக் என்பவர் 488 வது இடத்தையும், எழிலரசன் 523 வது இடத்தையும், குடியரசு என்ற அரசு ஊழியர் 849 வது இடத்திலும், ராகுல் 858 வது இடத்திலும் உள்ளனர்.

மத்திய அரசு பணிகளில் உயர் பொறுப்புகளை அலங்கரிக்க இருப்பவர்களுக்காக நடத்தப்படும் இந்த தேர்தலில் வென்றவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த தேர்வில் முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என்ற 3 நிலைகள் இருக்கின்றன. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1022 காலி பணியிடங்களுக்காக முதல் நிலை யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 2 தேர்வுகளிலும் தேர்ச்சியடைந்தவர்களுக்கு இறுதித் தேர்வான நேர்முகத் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. இம்மாதம் நேர்முகத் தேர்வு நடந்து முடிந்த நிலையில் தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications