Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப் மூக்கை வெட்டிய பிரேசில்.. மோடியிடம் போன்காலில் லூலா பேசியதன் பின்னணி.. அலறுதே அமெரிக்கா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பில் இப்போது அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது பிரேசில் தான். நம் நாட்டுடன் பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரிக்ஸ் உள்ளது. அமெரிக்க அதிபர் நம் நாட்டுக்கும், பிரேசிலுக்கும் 50 சதவீத வரிகளை போட்டுள்ளார். இந்நிலையில் தான் சொன்னது போலவே மோடியிடம் பேசி டிரம்பின் மூக்கை வெட்டி உள்ளார் பிரேசில் அதிபர் லூலா. இது அமெரிக்காவை கலங்க வைத்துள்ளது. அதன் பின்னணி பற்றி பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றது முதல் இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அடாவடித்தனமாக வரி விதித்து வருகிறார். இதில் அதிகபட்சமாக தற்போது பாதிக்கப்பட்டுள்ள நாடு என்றால் பிரேசில் தான். அந்த நாட்டுக்கு 50 சதவீதமாக வரி விதித்துள்ளார்.

us-tariff-row-why-brazil-president-lula-spoke-to-prime-minister-modi-instead-of-donald-trump-detai

இதற்கு, அடுத்தப்படியாக சீனா, 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 3வது இடத்தில் நம் நாடு உள்ளது. நம் நாட்டுக்கு டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் 25 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது. 2வது கட்டமாக விதித்த 25 சதவீத வரி இம்மாதம் இறுதியில் அமலாகிறது.

2வது கட்டமாக, 25 சதவீத வரி நமக்கு அமலாகும் பட்சத்தில் பிரேசிலுடன் சேர்ந்து நம் நாடும் அமெரிக்காவுக்கு 50 சதவீத வரியை செலுத்த வேண்டி இருக்கும். இதனால் அமெரிக்காவின் வரி விதிப்பில் சீனாவை விட அதிகமாக பாதிக்கப்படும் நாடாக பிரேசில் மாறிவிட்ட நிலையில் இந்தியா விரைவில் மாற உள்ளது. இந்தியாவுக்கும் பிரேசிலுக்கும் வரி விதிப்பதற்கு வெவ்வேறு காரணங்களை டிரம்ப் கூறி வருகிறார்.

பிரேசில் பற்றி டிரம்ப் கூறுகையில், ‛‛பிரேசில் அதிபர் ர் லூயிஸ் இனாசியோ லூலாவுக்கு ஒரு ஆஃபர் கொடுத்தார். வர்த்தக பற்றாக்குறையை சரி செய்யவே பிரேசிலுக்கு 50 சதவீத வரி போட்டுள்ளேன். இந்த பிரச்னை தொடர்பாக விவாதிக்க எப்போது வேண்டுமானாலும் பிரேசில் அதிபர் லூலா எனக்கு போன் செய்யலாம். பிரச்னையை பேசி தீர்க்கலாம்' என்றார். ஆனால் பிரேசில் அதிபர் லூலா டிரம்பிடம் பேச மறுத்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‛‛வரி விதிப்பு குறித்து நான் டிரம்பிடம் பேசமாட்டேன். அவர் எதையும் கேட்பதாக தெரியவில்லை. ஆனால் இது பற்றி பிரதமர் மோடியை அழைத்து பேசுவேன். சீன அதிபர் ஜின்பிங்கிடம் பேசுவேன்' என்று அதிரடி காட்டினார். அதன்படியே இப்போது பிரதமர் மோடியிடம் அவர் பேசி உள்ளார். இரு தலைவர்களும் ஒரு மணி நேரம் பேசினார்கள்.

லூலா விரைவில் பிரேசில் அதிபர் லூலா சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பேச உள்ளார். தற்போது மோடியிடம் பேசியிருப்பதன் மூலம் டிரம்பின் மூக்கை லூலா வெட்டி உள்ளார். மேலும் டிரம்பை விட நம் நாட்டின் பிரதமருக்கும், சீன அதிபருக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதுதான் பிரிக்ஸ் கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்பில் இந்தியாவும், பிரேசிலும் உள்ளன. ரஷ்யா, சீனவை போல் பிரிக்ஸ் அமைப்பின் தூண்களாக நம் நாடும், பிரேசிலும் உள்ளன. பிரிக்ஸ் அமைப்பில் அமெரிக்கா இல்லை.

அதோடு பிரிக்ஸ் கூட்டமைப்பை நினைத்து டிரம்ப் பயத்தில் உள்ளார். டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சியை கொண்டு வருவது பற்றி ஏற்கனவே இந்த கூட்டமைப்பு நாடுகள் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இது டிரம்பின் தூக்கத்தை கொடுத்துள்ளது. பிரிக்ஸ் கரன்சி வரும் பட்சத்தில் அமெரிக்காவின் டாலர் மதிப்பு சரியும். இதுதான் டிரம்பை தூங்க விடாமல் செய்கிறது.

இதற்கு பழிவாங்க டிரம்ப் பிரிக்ஸ் நாடுகளை குறிவைத்து வரிகளை விதித்து வருகிறார். அந்த வகையில் பிரேசில் அதிபர் லூலா வெளிப்படையாகவே பிரிக்ஸ் கரன்சி பற்றிய விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதனால் டிரம்ப் அந்த நாட்டை குறிவைத்து 50 சதவீத வரியை போட்டுள்ளார். இது ஒரு காரணம் என்றாலும் கூட பிரேசிலும், இந்தியாவும் அமெரிக்காவுக்கு நிறைய ஏற்றுமதி செய்கின்றன. அதே நேரம் அமெரிக்காவால் அதே அளவுக்கு இந்த இரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+