"வாவ்.. இதுதான் இந்தியாவா.! அமெரிக்காவையே தூக்கி சாப்பிட்டுவிடும் போல.." மிரண்ட அமெரிக்க யூடியூபர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டினர், இங்குப் பல இடங்களைச் சுற்றிப் பார்ப்பார்கள். இந்தியா என்றால் அவர்கள் ஒன்றை நினைத்திருப்பார்கள். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறாக இருக்கும். அதைப் பார்த்து வெளிநாட்டினர் மிரண்டு போவார்கள். இது தொடர்பாக அவர்கள் போடும் வீடியோக்களும் டிரெண்டாகும். அப்படி அவர் பதிவிட்டுள்ள ஒரு வீடியோ தான் இப்போது டிரெண்டாகி வருகிறது.

நம் நாட்டினர் எப்படி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வார்களோ.. அதேபோல ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவுக்கும் பல வெளிநாட்டினர் வருகிறார்கள். அப்படி வரும் வெளிநாட்டினரில் பலரும் இந்தியா ஏழ்மையான நாடு, எல்லா இடங்களிலும் குடிசை பகுதிகளே இருக்கும் என்றே நினைத்து வருகிறார்கள். ஆனால், உண்மை அதற்கு நேர் மாறாகவே இருக்கிறது.

offbeat India USA

அசந்துபோன அமெரிக்கர்

அப்படி இந்தியா வந்திருந்த அமெரிக்க ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. டெல்லி புறநகர்ப் பகுதியான குர்கான் சைபர் ஹப்பை பார்த்து அசந்துபோன அவரது வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 'வான் பாய்ஸ்' என்ற யூடியூப் சேனலில் இது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் அங்குள்ள விஷயங்களை மெய்மறந்து பாராட்டுகிறார். இங்குள்ள நவீன ஷாப்பிங் மால்கள் மற்றும் உணவகங்கள் அமெரிக்காவை விடச் சிறப்பாக இருப்பதாக அவர் பாராட்டுகிறார்.

சைபர் ஹப் அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்கு இணையாக இருப்பதாகவும், அதன் நவீனத் தன்மையும், அழகும் ஆச்சரியமளிப்பதாகவும் அந்த யூடியூபர் குறிப்பிட்டார். குர்கானின் உள்கட்டமைப்பு, குறிப்பாக சில்லிஸ் போன்ற சர்வதேச பிராண்டுகளின் இருப்பு, தன்னை கவர்ந்துவிட்டதாக அவர் குறிப்பிடுகிறார்.

offbeat India USA

இதுதான் இந்தியாவா

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்தியா என்றாலே முழுக்க முழுக்க குடிசை பகுதிகள், அதிக மக்கள், குப்பைகளும் மட்டும் இருக்கும் என நாம் நினைப்போம். ஆனால், அது உண்மை கொண்டதல்ல. காற்று மாசு இருந்தாலும், இது போன்ற அழகிய இடங்கள் உள்ளன! சில்லிஸ் போன்ற அனைத்து வசதிகளும் இங்கு இருக்கின்றன" என்று அவர் வீடியோவில் கூறினார். இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இங்கு சில மோசமான விஷயங்கள் இருந்தாலும், இது போன்ற அற்புதமான இடங்களும் இருக்கின்றன" என்றார்.

அமெரிக்காவை விட பெஸ்ட்

குருகிராமின் சைபர் ஹப்பின் நவீன தோற்றத்தை அமெரிக்காவின் மியாமி உடன் ஒப்பிட்ட அவர், அமெரிக்காவில் தான் பார்த்ததை விட இது சிறப்பாக இருப்பதாகக் கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில், "மாசடைந்த இந்தியாவில், மியாமியை விட அழகாக இருக்கும் ஒரு சுத்தமான ஷாப்பிங் மையம் உள்ளது. இந்தியாவில் இது போன்ற இடங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று அவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

offbeat India USA

நெட்டிசன்கள்

இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவுக்கு பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இது மட்டுமின்றி இந்தியாவில் பல இடங்கள் இதுபோல இருப்பதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "இந்தியாவில் இது போன்ற இடங்களைப் பார்க்கும்போது பெருமைப்படுகிறேன். இதுபோன்ற இடங்கள் மேலும் பல பகுதிகளில் உருவாக வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்..

இன்னொரு நபர், "மக்கள் தொகை அதிகம் உள்ள சில நகரப் பகுதிகளைக் காட்டிலும் பல பகுதிகள் உள்ளன. அந்த இந்தியா நீங்கள் நினைப்பதை விட அழகானது" என்று கருத்து தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+