துறவி, புரோகிதர், பூசாரிகளுக்கு நலவாரியம்! உதவித்தொகை வழங்க முடிவு! உபி அரசு பரபர அறிவிப்பு
டெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் துறவிகள், புரோகிதர்கள், பூசாரிகளுக்காக நலவாரியம் அமைக்கப்படுவதுடன், வயது முதிர்ந்த துறவி, புரோகிதர், பூசாரிகளுக்கு உதவித்தொகையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முடிவு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதன்மூலம் 2வது முறையாக யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியேற்றார்.
இதையடுத்து தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் அவர் நிறைவேற்றி வருகிறார். இத்திட்டங்கள் அமைச்சரவை ஒப்புதல் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

நலவாரியம் - உதவித்தொகை
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி தற்போது உத்தர பிரதேசத்தில் துறவிகள், புரோகிதர்கள், பூசாரிகளுக்கு நலவாரியம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நலவாரியம் சார்பில் வயது முதிர்ந்த நிலையில் மடங்களில் வாழும் துறவிகள், புரோகிதர்கள், கோயில் பூசாிரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அத்துடன் புரோகிதர் மற்றும் கோயில்களின் பூசாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படுவதுடன் பிற சலுகைகளும் வழங்கப்பட உள்ளது.

சுற்றுலா மேம்பாடு
ஆன்மிகம் சார்ந்த பஜனை, கீர்த்தனைகளுக்காக உத்தர பிரதேசத்தில் உள்ள தெய்வீக நகரங்களான மதுரா, வாரணாசி, அயோத்தியா மற்றும் கோரக்பூரில் பயிற்சி நிலையங்களும் நிறுவ முடிவு செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளை கவர ராமாயணம், மகாபாரதம், சூபி, பவுத்தம் மற்றும் சுதந்திர போராட்டங்கள் சார்ந்த 12 வகை சுற்றுலா தலங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 75 மாவட்டங்களில் சுற்றுச்சூழல் கிராம சுற்றுலா பிரிவுகளும் புதிதாக உருவக்கப்பட உள்ளன. மேலும் மதுராவிலிருந்து பர்ஸானா, பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமம் மற்றும் ஜான்சி கோட்டையில் ரோப்கார் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் கோயில்களின் வரலாறு, ஆன்மிக நாட்குறிப்புகள் உள்ளிட்டவைகளுடன் சுற்றுலா இணையதளமும் உருவாக்கப்பட உள்ளன.

மொழி அகாடமி
இதுதவிர உத்தர பிரதேசத்தில் இந்தி, உருது, போஜ்புரி, அவதி, கடிபோலி உள்ளிட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகளை வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொழி அகாடமி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ, லக்கிம்பூர் கெரி மற்றும் சோன்பத்ராவில் பழங்குடிகளுக்கான அருங்காட்சியகமும் புதிதாக அமைக்கப்பட உள்ளன. இத்துடன் மாநிலம் உருவானதை நினைவுகூறும் வகையில் உத்தரப் பிரதேச நாள்' ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒலிபெருக்கி பிரச்சனை
இதுதவிர மதகலவரங்களை தடுக்கும் வகையில் மதம் சார்ந்த ஊர்வலங்களுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் மக்களுக்கு இடையூறு ஏற்படாது. ஏற்பட்டால் முழுபொறுப்பு ஏற்பதாக எழுதி வாங்கிய பின்தான் அனுமதி கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் கலவரம், வன்முறையில் பொதுசொத்துகள் சேதப்படுத்தப்பட்டால் அதன் நிர்வககளிடம் இழப்பீடு பெறவும் விதிகள் மாற்றம் செய்யப்பட உள்ளது. மேலும் மாநிலம் முழுவதிலும் மசூதி, கோயில் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஒலிப்பெருக்கிகளையும், அதன் ஒலி அளவையும் கணக்கீட உத்தரவிடப்பட்டது. மேலும் புதிதாக ஒலிபெருக்கி அமைக்க தடை விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications