Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மண்ணில் புதையும் ஜோஷிமத்.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை.. அதிரடியாக பறந்த 10 உத்தரவுகள்! சுறுசுறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரம் மண்ணில் புதையும் தருவாயில் உள்ள நிலையில் மக்கள் பீதியில் வெளியேறி வருகின்றன. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசரஅவசரமாக ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் 10 உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்த அவர் ஆர்டர் போட்ட நிலையில் பணிகள் சுறுசுறுப்பாக துவங்கி உள்ளன.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்துள்ளது. ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் இமயமலையின் அடிவாரத்தில் இந்த நகரம் இருக்கிறது. இது சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. இமயமலையில் மலை ஏற செல்பவர்களையும், பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை செய்பவர்களுக்கும் இந்த ஜோஷிமத் நகரம் வழியாக தான் சென்று வருகின்றனர்.

தற்போது ஜோஷிமத் கிராமத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இங்கு அடிக்கடி நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் ஜோஷிமத் மிகவும் ஆபத்தான பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு மக்கள் வாழ்வது என்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் நிலநடுக்கம், நிலச்சரிவு உள்ளிட்ட அபாயங்கள் என்பது பிற இடங்களை காட்டிலும் ஜோஷிமத்துக்கு அதிகமாக இருப்பதே காரணமாகும்.

 1976 முதல் எச்சரிக்கை

1976 முதல் எச்சரிக்கை

இந்த ஜோஷிமத் நகரம் குறித்து விஞ்ஞானிகள், புவியியல் ஆர்வலர்கள் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இங்கு வசிப்பது மிகவும் ஆபத்தானது. உயிருக்கு, உடைமைகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் வாழும் சூழல் தான் உள்ளது என கடந்த 1976 முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நிலைமை ரொம்ப மோசமாகி உள்ளது. இதுதொடர்பாக மிஸ்ரா கமிஷன் அறிக்கையில் ஆபத்து குறித்த முழுவிபரங்கள் இடம்பெற்றிருந்தது. அதில், ‛‛ஜோஷிமத் என்பது நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் அமைந்துள்ள புவியியல் அமைப்பு மிகவும் மோசமானது. நிலச்சரிவு ஏற்ப்பட்ட நிலமான இங்கு மக்களின் எடைகளை தாங்கும் சக்தி என்பது மிகவும் குறைவானது. இதனால் அதிகளவிலான மக்கள் குடியேறுவதையும், கட்டுமான பணிகள் மேற்கொள்வதையும் அனுமதிக்க கூடாது'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மண்ணில் புதையும் நிலையில்...

மண்ணில் புதையும் நிலையில்...

இதற்கிடையே தான் கடந்த 20 ஆண்டுகளாக கட்டுமானம், நீர் மின் திட்டங்கள் மற்றும் சாலை விரிவாக்கம் பணிகள் நடந்தன. இது நிலைமையை இன்னும் மோசமாக மாற்றி உள்ளன. தற்போது மண்ணில் புதையும் தருவாயில் ஜோஷிமத் உள்ளது. அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில் சுமார் 600க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. கோவில்கள், வீடுகள் மண்ணில் புதைந்துள்ள நிலையில் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. இந்நிலையில் தான் அங்கு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி நிலைமையை ஆய்வு செய்து, அப்பகுதியில் நடைபெற்றுவந்த அரசின் கட்டுமானத் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

 பிரதமர் மோடி அவசர ஆலோசனை

பிரதமர் மோடி அவசர ஆலோசனை

இந்நிலையில் தான் ஜோஷிமத் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தது. இந்த கூட்டத்தில் ஜோஷிமத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை, அதற்கு தீர்வு காண்பது பற்றியும், அங்கு வசிக்கும் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன்பிறகு இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 10 முடிவுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனை உடனடியாக செயல்படுத்த பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதுபற்றிய விபரம் வருமாறு:

மீட்பு பணியில் அதிகாரிகள்

மீட்பு பணியில் அதிகாரிகள்

முதலாவதாக ஜோஷிமத் பிரச்சனையை சமாளிக்க வல்லூநர்கள் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நிபுணர்கள் அதற்கான திட்டங்களை தயாரித்து வருகின்றனர். இரண்டாவதாக ஜோஷிமத் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நடக்கும் நீர்மின் திட்டங்கள் உள்பட பிற பெரிய கட்டுமானப் பணிகளால் நிலம் பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரித்த நிலையில் மக்களுக்கு தேவையான மாற்று இட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மூன்றாவதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும், மாநில பேரிடர் மீட்பு படையின் நான்கு குழுக்களும் ஜோஷிமத்தில் தயாராக நிற்கும் நிலையில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவிடப்பட்டு அந்த பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

சிறப்பு குழு ஆய்வுக்கு உத்தரவு

சிறப்பு குழு ஆய்வுக்கு உத்தரவு

நான்காவதாக தெளிவான திட்டமிடலுடன் மறுபுனரமைப்பு திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்பதோடு, நில அதிர்வுகள் உன்னிப்பாக கண்காணிப்பட வேண்டும். மேலும் ஆபத்து நிறைந்த ஜோஷிமத் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தையும் உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஐந்தாவதாக எல்லைப்பகுதி மேலாண்மை செயலாளர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அல்லது தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாளை மாநிலத்திற்கு சென்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

 விரிவான அறிக்கை

விரிவான அறிக்கை

ஆறாவதாக பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தார். இந்த வேளையில் மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார். ஏழாவதாக ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ரிமோட் சென்சிங் நிறுவனம் ஆகியவை ஜோஷிமத்தை செயற்கைகோள் படங்கள் மூலம் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

கடைசி 3 உத்தரவுகள் என்ன?

கடைசி 3 உத்தரவுகள் என்ன?

எட்டாவதாக காலநிலை மாற்றம் மற்றும் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தியது தான் தற்போதைய பாதிப்புக்கு காரணம் என உள்ளூர் மக்கள் கூறி வரும் நிலையில் மனிதர்களின் செயல்பாடும், இயற்கையின் செயல்பாடும் இணைந்ததால் தான் தற்போது பிரச்சனை என்பது எடுத்து கூறப்பப்பட்டது. ஒன்பதாவதாக உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்த உத்தரவிடப்பட்டது. மேலும் 10வதாக ஜோஷிம மிகவும் கடுமையான பாதிப்பை சந்திக்கும் பகுதியாக வகைப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+