இப்படித்தானே தமிழர்களுக்கும் வலிக்கும்.. இந்தியா டுடே சேனலில் திடீரென பெண் நெறியாளர் செய்த "சம்பவம்"
டெல்லி: மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் வெடித்துள்ள நிலையில், இந்தியா டுடே ஆங்கில தொலைக்காட்சியில் இந்தி திணிப்பு தொடர்பான செய்தியை செய்தி வாசிப்பாளர் தமிழில் செய்தி வாசித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றது. இதில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மைதான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு 'ஒரே நாடு' என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாகும்.

ஸ்டாலின் அறிக்கை
வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம்.

உரச வேண்டாம்
எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என மாண்புமிகு பிரதமர் அவர்கள் தலைமையிலான ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

திமுக போராட்டம்
இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து அக்டோபர் 15 ஆம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தி திணிப்பு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தியா டுடே நெறியாளர்
இதற்கிடையே இந்தியாவின் முன்னனி ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடேவில் இந்தி திணிப்பு தொடர்பான விவாதத்தின் அறிமுகத்தை அக்ஷிதா நந்தகோபால் என்ற நெறியாளர் தமிழில் அளித்துள்ளார். "வணக்கம். நீங்கள் பார்க்கிறீர்கள் 6 PM பிரைம். நான் அக்ஷிதா நந்தகோபால். இன்னைக்கு நாம் விவாதிக்கப்போவது, இந்தி மொழி திணிப்பு." என்று தமிழில் கூறினார்.

இந்தி திணிப்பு
இதனை தொடர்ந்து ஆங்கிலத்தில், "நீங்கள் தமிழனாக இருந்து உங்களுக்கு தமிழ் மொழி புரிந்தால் நான் என்ன சொல்கிறேன் என்று முழுமையாக உங்களுக்கு புரியும். ஆனால், நீங்கள் தமிழனாக இல்லாவிட்டால் உங்களுக்கு நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று புரியாது. இந்த மொழியை உங்களிடம் திணித்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

தமிழ்நாட்டில் நடப்பது என்ன?
தேர்வுகள், பயிற்று மொழி ஆகியவை தமிழில் இருந்தால் உங்களால் எப்படி சமாளிக்க முடியும். இதுதான் தற்போது தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தி பேசப்படாத நிலையில் அங்கு இது திணிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது இதுவே விவாதப்பொருளாகி இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது." என்றார்.
-
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications