டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்க எண்ணம் எதுவா இருந்தாலும் ஓட்டு போட்டு அத எங்களுக்கு காட்டுங்க... பிரதமர் மோடி, ராகுல் ட்விட்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் 95 தொகுதிகளில் இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரபலங்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். இன்றைய இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்

Vote for the Lok Sabha polls regularly .. Modi, Rahul Request

பலத்தை பயன்படுத்துங்க மக்களே...

மக்களவை தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இன்று மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளர்களும் நமது ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும். இதற்காக மக்கள் தங்களின் ஜனநாயக பலத்தை பயன்படுத்த வேண்டும். இத்தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிப்பார்கள் என நம்புவதாக கூறியுள்ளார்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிாயம் கிடைக்க ஓட்டு போடுங்க....

எதிர்கட்சித் தலைவரான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வாக்காளர்களே நீங்கள் இன்று போடப்போகும் வாக்கு நியாயத்திற்கானதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். நமது வேலையற்ற இளைஞர்கள், போராடும் நமது விவசாயிகள், பணமதிப்பிழப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், ஜாதி அல்லது மதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு நியாயம் கிடைக்க ஓட்டளியுங்கள் என கூறியுள்ளார்.

அரசியல் மாற்றம் ஏற்பட வாக்களியுங்கள்...

முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்று நல்ல நாள். இந்திய நாட்டிலும் தமிழ் நாட்டிலும் நாம் விரும்பும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதிய அரசுகள் அமைவதற்கு நாம் வாக்களிப்போம். சுதந்திரம், ஜனநாயகம், சுயமரியாதை, மனித உரிமைகள், எம்மதமும் சம்மதம், பகுத்தறிவு, பொருளாதார முன்னேற்றம், தமிழ் இன மாண்பு ஆகிய குணங்கள் வெல்ல வாக்களிப்போம் என தெரிவித்துள்ளார்.

English summary
Prime Minister Modi, Congress leader Rahul Gandhi and former Union Minister P. Chidambaram have asked their voters on their Twitter page
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X