வி.பி.என் இனி பிரைவசி கிடையாது.. எல்லாமே கண்காணிக்கப்படும்.. புது ரூல்ஸ் போட்ட அரசு!
டெல்லி: வி.பி.என் சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவில் அதனைப் பயன்படுத்துபவர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதிய நடைமுறையைப் பின்பற்றத் தவறினால் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரைவசிக்காக வி.பி.என் சேவைகளை நாடும் பயன்பாட்டாளர்ளுக்கு, இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வி.பி.என் நெட்வொர்க்
விர்ச்சுவல் பிரைவட் நெட்வொர்க் எனப்படும் வி.பி.என் சேவை மூலமாக ஒருவர் தங்கள் இருப்பிடத்தை மறைத்து இணையத்தில் உலவ முடியும். இதன் மூலம் தடைசெய்யப்பட்ட இணையதளங்களை அணுகமுடியும்.
இந்தியாவில் பிரைவசிக்காகவும், தடை செய்யப்பட்ட கேம்களை விளையாடுவதற்கும், ஆபாச படங்கள் பார்ப்பதற்கும் வி.பி.என் தளங்களை பலரும் உபயோகிக்கின்றனர். தீவிரவாத செயல்களுக்கும் வி.பி.என் பயன்படுத்தப்படக்கூடும்

புதிய உத்தரவு
இந்நிலையில், வி.பி.என் சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவில் அதனைப் பயன்படுத்துபவர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் பாதுகாப்புக்கான சி.இ.ஆர்.டி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
சி.இ.ஆர்.டி உத்தரவின்படி, இனி வி.பி.என் பயனர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைத்திருக்க வேண்டும். மேலும், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனங்களும் பயனர்களின் பரிவர்த்தனை விவரங்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறை தண்டனை
சமூக ஊடக கணக்குகள், அங்கீகரிக்கப்படாத அணுகல் உட்பட 20 தரவுகளை அரசுக்கு வி.பி.என் நிறுவனங்கள் அளிக்க வேண்டும். இது சந்தேகப்படும்படி எதேனும் நடந்திருந்தால், உடனடியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூலை மாதம் முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வர உள்ளது. இதனைப் பின்பற்றத் தவறினால் தகவல் தொழில்நுட்ப சட்டப்படி சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பயன்பாட்டாளர்கள் அதிர்ச்சி
இலவசமாக மட்டுமல்லாது கட்டணம் செலுத்தி பெறும் வி.பி.என் சேவைகளும் உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதால் தனியுரிமை தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என பயன்பாட்டாளர்கள் அவற்றை நாடுகின்றனர்.
பிரைவசிக்காக வி.பி.என் சேவைகளை நாடும் பயன்பாட்டாளர்ளுக்கு, இந்த உத்தரவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் தகவல்களும் சேமித்துக் கொள்ளப்படுமானால் எதற்காக நாங்கள் வி.பி.என் பயன்படுத்த வேண்டும் என்பதே பயனர்களின் கேள்வியாக உள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications