அடுத்த கொரோனா அலை..இந்த 3 விஷயம் ரொம்ப முக்கியம்..புதிய உருமாறிய வைரஸ் வருமா?எய்ம்ஸ் இயக்குநர் பளிச்
டெல்லி: கொரோனா வைரஸ் வரும் காலத்தில் எப்படிச் செயல்படும் என்பதை நாம் இப்போதே கூற முடியாது என்று தெரிவித்துள்ள எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, இருப்பினும் வரும் காலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் உருமாறிய கொரோனா ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் குறைந்துள்ளதுள்ளது. ஒரு கட்டத்தில் நான்கு லட்சத்தைத் தாண்டிய கொரோனா இப்போது தான் 50 ஆயிரத்திற்கு உள்ளது.
இதையடுத்து கொரோனா ஊரடங்கில் மாநில அரசுகள் மெல்லத் தளர்வுகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளன. அதேநேரம் தளர்வுகளால் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

3 விஷயங்கள்
இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், "கொரோனா 3ஆம் அலை குறித்து அச்சுறுத்தல்களும் தகவல்களும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதை மூன்று முக்கிய விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் நம்மால் தடுத்து நிறுத்த முடியும். அடுத்த சில மாதங்களில் நாட்டில் அதிகப்படியான மக்களுக்கு நாம் கொரோனா வேக்சின் செலுத்த வேண்டும்

கொரோனா ஆன்டிபாடிகள்
அடுத்ததாக தேவையற்ற பயணங்கள், ஒரே இடத்தில் தேவையின்றி அதிக பேர் ஒன்றுகூடுவது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மூன்றாவதாக கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். இவை மூலம் கொரோனா 3ஆம் அலையை நாம் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியும். சமீபத்தில் நடத்தப்பட்ட சிரோ சர்வே-இல் கூட இந்தியாவில் அதிகப்படியான மக்களுக்கு ஆன்டிபாடி இருப்பது உறுதியாகி உள்ளது.
வரும் காலங்களில் புதிய உருமாறிய கொரோனா உருவாக வாய்ப்பு குறைவே என்றே நான் கருதுகிறேன்.ஆனால், இந்த வைரஸ் எப்படிச் செயல்படும் என்பதை நம்மால் உறுதியாகக் கணிக்க முடியாது. இந்தியர்களிடையே இருக்கும் ஆன்டிபாடிகள் அடுத்து வரும் அலைகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

உருமாறிய கொரோனா
வரும் காலங்களில் புதிய உருமாறிய கொரோனா உருவாக வாய்ப்பு குறைவே என்றே நான் கருதுகிறேன்.ஆனால், இந்த வைரஸ் எப்படிச் செயல்படும் என்பதை நம்மால் உறுதியாகக் கணிக்க முடியாது. இந்தியர்களிடையே இருக்கும் ஆன்டிபாடிகள் அடுத்து வரும் அலைகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.

சிரோ சர்வே
இந்தியாவில் கடந்த ஜூன் மாத இறுதியில் நடத்தப்படும் சிரோ சர்வே முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதில் நாட்டு மக்கள் தொகையில் நான்கில் மூன்று பேருக்கு கொரோனா ஆன்டிபாடிகள் இருப்பது தெரிய வந்தது. அதேநேரம் நாட்டில் சுமார் 40 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்திலேயே உள்ளதாகவும் கூறப்பட்டது. கொரோனாவில் இருந்து குணமடைந்தால் மற்றும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும்போது ஒருவரின் உடலில் ஆன்டிபாடிகள் ஏற்படும்.












Click it and Unblock the Notifications