பொதுமக்கள் மாஸ்க் போட்டா முழு லாக்டவுன் எதுக்கு? டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: பொதுமக்கள் முக கவசங்களை தொடர்ந்து அணிந்து வந்தால் லாக்டவுன் அமல்படுத்த தேவை இல்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 1.56 லட்சமாக பதிவாகி இருக்கிறது. கொரோனா மரணங்கள் 327 ஆக அதிகரித்திருக்கிறது.
நாட்டில் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து டெல்லியில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. டெல்லியில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,000-த்தை தாண்டி பதிவாகி உள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்கள்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில் பணியாளர்கள் சுமார் 1,000 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல் உச்சநீதிமன்றத்தில் 4 நீதிபதிகள், 100க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லாக்டவுன்
டெல்லியில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. வார இறுதி நாட்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி கொரோனா நிலவரம் தொடர்பாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

நோ லாக்டவுன்
டெல்லியில் செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டெல்லியில் பொதுமக்கள் முக கவசங்களை அணிந்து வரவேண்டும். அப்படி செய்தால் லாக்டவுனை அமல்படுத்த வேண்டிய தேவை இருக்காது. டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் அச்சப்பட தேவை இல்லை.

கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும்
எனக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது. முதல் 2 நாட்கள் மட்டும் எனக்கு காய்ச்சல் இருந்தது. அதன்பிறகு உடல்நிலை சீரானது. ஒரு வார காலம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். இருந்தபோதும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிர்வாகப் பணிகளை கவனித்து வந்தேன். கடந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா 2-வது அலை தாக்கியது. அப்போது மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது அப்படியான ஒருநிலைமை இல்லை. டெல்லியில் இன்று ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 22,000-த்தை கடக்கும் என்பது எதிர்பார்ப்பு. நாளை கொரோனா நிலவரம், கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications