4-ஆம் தொழில்புரட்சிக்கு உலக அளவில் 5 புதிய மையங்கள்.. இந்தியாவில் எங்கே அமைகிறது தெரியுமா?
டெல்லி: உலக பொருளாதார மன்றம் 4-ஆம் தொழில்புரட்சிக்காக 5 புதிய மையங்களை அமைக்க உள்ளது. இதில் ஒன்று ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் அமைய உள்ளது. நடைமுறைக்கு ஏற்ற கொள்கைகள், விதிமுறைகள், பிராந்தியங்களுக்கு முன்னுரிமை, மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை கொண்டு வரும் நோக்கில் இந்த மையங்கள் செயல்படும் என உலக பொருளாதார கூட்டமைப்பின் தலைவர் போர்ஜ் பிரண்டே கூறியுள்ளார்.
4-வது தொழில் புரட்சிக்காக 5 புதிய மையங்களை நிறுவ உலக பொருளாதார மன்றம் (WEF) திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு மையம் இந்தியாவில் அமைகிறது. இந்தியாவில் ஏற்கனவே இதுபோன்ற இருமையங்கள் உள்ளன. மும்பை மற்றும் தெலுங்கானாவில் தலா ஒரு மையங்கள் உள்ள நிலையில், தற்போது ஆந்திராவில் ஒரு மையம் அமைய இருக்கிறது.

மற்ற மையங்கள் பிரான்ஸ், பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைகின்றன. இது குறித்து உலக பொருளாதார கூட்டமைப்பின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி போர்ஜ் பிரண்டே கூறும் போது, "வளர்ந்து வரும் தொழில் நுட்ப சவால்களுக்கு தீர்வு காண்பதில் அரசு மற்றும் தொழில்துறை, நிபுணர்களை ஒருங்கிணைக்கும் விதமாக 4 ஆம் தொழில் புரட்சிக்கான 5 புதிய மையங்கள் தொடங்கப்படும்.
நான்காம் தொழில்துறை புரட்சி நெட்வொர்க் என்பது பல தரப்பினரின் ஒத்துழைப்பிற்கான ஒரு தளமாகும். இது பொது மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைத்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சமூகத்திற்குப் பலன்களை வழங்குவதையும், அதே நேரத்தில் அபாயங்களைக் குறைப்பதையும் உறுதிசெய்யும் நோக்கில் கொண்டு வரப்படுகிறது.
நடைமுறைக்கு ஏற்ற கொள்கைகள், விதிமுறைகள், பிராந்தியங்களுக்கு முன்னுரிமை, மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை கொண்டு வரும் நோக்கில் இந்த மையங்கள் செயல்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் அமைய இருக்கும் இந்த புதிய மையம் தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:- "உலகம் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள இடங்களில் திறனை வளர்ப்பதற்கான நமது உறுதிப்பாட்டை உலக வர்த்தக மன்றத்துடனான இந்த கூட்டாண்மை பிரதிபலிக்கிறது" என்றார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications