பாக். டீ எப்படியிருந்துச்சு.. விசாரித்த மனைவி.. நீ போடுவதை விட சூப்பர்.. கலாய்த்த அபிநந்தன்!
Recommended Video

டெல்லி: பாகிஸ்தான் பிடியில் இருந்த அபிநந்தனுக்கு அவருடைய மனைவியுடன் செல்போனில் பேச வாய்ப்பு கிடைத்தபோது மனைவி போடும் டீயை விட பாகிஸ்தானியர்கள் கொடுத்த டீ நன்றாக இருந்ததாக அபிநந்தன் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமான படை புறமுதுகிட்டு ஓடச் செய்தது.
அந்த சமயம் பாகிஸ்தான் விமான படை சுட்டதில் தப்பிப்பதற்காக பாராசூட் மூலம் இந்தியாவின் விங் கமாண்டர் அபிநந்தன் குதித்த போது துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் எல்லையில் விழுந்தார். அப்போது அபிநந்தன் பாகிஸ்தான் உளவு அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டார்.

அபிநந்தன் மனைவி
பாகிஸ்தான் காவலர் ஒருவர் அபிநந்தனின் மார்பில் குத்தி, கன்னத்தில் அறைந்துள்ளார். மற்றொரு காவலர் உங்கள் மனைவியுடன் பேசி கொள்ளுங்கள் என செல்போனை கொடுத்துள்ளார். சவூதி அரேபியா மூலம் அபிநந்தனின் மனைவிக்கு போன் வந்தது. இதனால் பேசுவது அபிநந்தன் தானா என்ற சந்தேகம் மனைவி தன்விக்கு இருந்தது.

குழந்தைகளுக்கு என்ன சொல்வது
ஒரு வேளை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் வேலையாக இருக்குமோ என நினைத்த தன்வி அந்த போன் காலை ரெக்கார்ட் செய்தார். பின்னர் பேசுவது அபிநந்தன்தான் என தெரியவந்ததும் தன்வி பேச தொடங்கினார். முதலில் எப்போதும் போல் எங்கே இருக்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள் என்ற கேள்விகளை கேட்ட பிறகு நீங்கள் எங்கே என கேட்டால் குழந்தைகளுக்கு நான் என்ன சொல்வது என கேட்டுள்ளார் தன்வி.

நகைச்சுவை
இதனிடையே அபிநந்தன் டீ குடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பாகிஸ்தான் வெளியிட்டது. இதை பார்த்து விட்டு தன்வி மிகவும் நகைச்சுவையாக அபிநந்தனிடம் பேசியுள்ளார். அந்த உரையாடல் பின்வருமாறு:

எப்படியிருந்தது?
தன்வி: டீ எப்படி இருந்தது
அபிநந்தன்: நன்றாக இருந்தது.
தன்வி: நான் போடும் டீயை விடவா நன்றாக இருந்தது
அபிநந்தன்: ஆமாம், நீ போடுவதைவிட நன்றாக இருந்தது.
தன்வி: அப்போ, அந்த சுவையான டீயை எப்படி போடுவது என்பது குறித்த குறிப்புகளை கேட்டு வாருங்கள் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications