உலகின் "பெஸ்ட்" ஏர்போர்ட்! பெங்களூருக்கு 2ஆம் இடம்! டாப் இடத்தில் மற்றொரு தென்னிந்திய ஏர்போர்ட்! செம
டெல்லி: இந்திய விமான துறை வேற லெவலில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், தென்னிந்தியாவில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் சர்வதேச அளவில் டாப் இடத்தை பிடித்துள்ளன.
இந்தியாவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை காட்டிலும் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
அதிகரிக்கும் மிடில் கிளாஸ் மக்களின் எண்ணிக்கை, விமான டிக்கெட்களின் விலை குறைவது ஆகியவை விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. இதனால் இந்தியாவில் விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

ஏர்போர்ட்டுகள்: இதனால் இப்போது இந்திய விமான நிலையங்களும் சர்வதேச தரத்தில் மாறி வருகிறது. இதனிடையே தென்னிந்தியாவில் உள்ள விமான நிலையம் ஒன்று சர்வதேச அளவில் ரெக்கார்ட் செய்துள்ளது. துல்லியமான நேரத்தில் விமானங்களை இயக்கும் punctuality என்ற பிரிவில் சர்வதேச அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. Cirium என்ற சர்வதேச அமைப்பு தான் உலகளவில் பல விமான நிலையங்களில் ஆய்வு செய்து இந்த லிஸ்டை ரெடி செய்துள்ளது.
இந்திய விமான துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் இதில் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் பன்ச்சுவாலிட்டி பிரிவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. பன்ச்சுவாலிட்டிக்கு பெயர்போன ஜப்பான் விமான நிலையங்களை எல்லாம் கூட ஹைதராபாத் விமான நிலையம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதேபோல இந்தப் பட்டியலில் மற்றொரு தென்னக விமான நிலையமான பெங்களூர் ஏர்போர்ட்டும் டாப் இடத்தில் உள்ளது.

4 வகையான ஏர்போர்ட்கள்: சர்வதேச அளவில் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட விமானங்களை ஆய்வு செய்து இந்தப் பட்டியலை அவர்கள் உருவாக்கியுள்ளனர். அதன்படி ஏர்போர்ட்களை 4 பிரிவாக அவர்கள் பிரித்துள்ளனர். 4 கோடி பயணிகளைக் காட்டிலும் கூடுதலாகக் கையாளும் ஏர்போர்ட்கள் குளோபல் ஏர்போர்ட்கள், 2.5 கோடி முதல் 4 கோடி பயணிகளைக் கையாண்டால் அது பெரிய ஏர்போர்ட்கள் எனப் பிரித்துள்ளனர்.
அதேபோல 1.5 கோடி முதல் 2.5 கோடி பயணிகள் என்றால் அது மீடியம் விமான நிலையம் என்றும் 50 லட்சம் முதல் 1.5 கோடி பயணிகளைக் கையாண்டால் அது சிறிய விமான நிலையம் என்றும் பிரித்து வகைப்படுத்தி இந்த லிஸ்டை ரெடி செய்துள்ளனர்.
தென்னிந்திய ஏர்போர்ட்கள்: அதேநேரம் பன்ச்சுவாலிட்டி பிரிவில் இந்திய விமான நிலையங்கள் டாப் இடத்தை பிடிப்பது இது முதல் முறை இல்லை. முன்னதாக, நவம்பர் 2022ஆம் ஆண்டிலும், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் டெல்லி, மும்பை விமான நிலையங்களை பின்னுக்குத் தள்ளி பன்ச்சுவாலிட்டி பிரிவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சிரியம் நிறுவன அறிக்கையின்படி, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் 90.43 சதவீத பன்சுவாலிட்டியுடன் செயல்படுகிறது. சர்வதேச அளவில் 90 சதவீத பன்சுவாலிட்டியை தாண்டிய ஒரே விமானம் ஹைதராபாத் விமான நிலையம் மட்டுமே.. இந்த ஏர்போர்டடில் இருந்து 29 ஏர்லைன்ஸ் மற்றும் 77 வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

பெங்களூர்: அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் 86.14% இல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து கொலம்பியா ஏர்போர்ட் மூன்றாவது இடத்தில் உள்ளது. இதன் மூலம் டாப் இரண்டு இடங்களை ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஏர்போர்ட்டுகள் பிடித்துள்ளன.
பொதுவாக டாப் 3 இடங்களில் எப்போதும் ஜப்பான் விமான நிலையங்களே இருக்கும் நிலையில், இப்போது அது மாறியுள்ளது. அதேநேரம் மீடியம் மற்றும் சிறிய ரக விமான நிலையங்களில் இந்தியாவில் இருந்து எந்தவொரு விமான நிலையமும் டாப் 20 இடங்களில் இல்லை.












Click it and Unblock the Notifications