இந்தியா பெயரை பாரத் என மாற்றுவோம்! பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்! பாஜக தலைவர் சர்ச்சை
டெல்லி: இந்தியாவின் பெயர் பாரத் என்று மாற்றப்படும் என்று மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டின் பெயரை பாரத் என்ற மாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்த மாதம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதில் இது குறித்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், மத்திய அரசிடம் இருந்து இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இதற்கிடையே பாரத் பெயர் மாற்றம் குறித்து பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் மாற்றம்: அதாவது விரைவில் இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படும் என்றும், கொல்கத்தாவில் உள்ள வெளிநாட்டவர்களின் சிலைகள் அகற்றப்படும் என்றும் திலீப் கோஷ் கூறியிருந்தார். நாட்டின் பெயர் மாற்றத்திற்கு எதிரானவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என என்றும் அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தின் மெதினிபூர் எம்.பியான திலீப் கோஷ் தனது தொகுதியில் கரக்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "மேற்கு வங்கத்தில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும், கொல்கத்தாவில் உள்ள அனைத்து வெளிநாட்டவர்களின் சிலைகளையும் உடனடியாக அகற்றுவோம்..
சர்ச்சை கருத்து: இந்தியாவின் பெயர் நிச்சயமாக பாரத் என்று மாற்றப்படும். அதை விரும்பாதவர்கள் நாட்டை விட்டு தாராளமாக வெளியேறலாம்" என்று அவர் தெரிவித்தார். திலீப் கோஷின் இந்தக் கருத்துகள் இணையத்தில் மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மேற்கு வங்கத்தை சேர்ந்த மற்றொரு மூத்த பாஜக தலைவரான ராகுல் சின்ஹா, "ஒரு நாட்டிற்கு இரண்டு பெயர்கள் நிச்சயம் இருக்க முடியாது.. உலகத் தலைவர்கள் ஜி20 மாநாட்டில் பங்கேற்க டெல்லியில் இருக்கும் நிலையில், நாட்டின் பெயரை மாற்ற இதுவே சரியான நேரம்" என்றார். இப்படி இரு பாஜக தலைவர்கள் பெயர் மாற்றம் குறித்துக் கூறிய கருத்துகள் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
திரிணாமுல் பதிலடி: இதற்கு அங்கே ஆளும் கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் சாந்தனு சென் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் அனைவரும் இப்போது இந்தியக் கூட்டணிக்குக் கீழ் வந்துள்ளோம். இதைப் பார்த்து பாஜக பயந்துவிட்டது. இதனால் உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்ப பாஜக முயல்கிறது. இதன் காரணமாகவே அவர்கள் இப்படிப் பேசி வருகிறார்கள்" என்று குற்றஞ்சாட்டினார்.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இப்போது 25+ எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரண்டுள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் என பல்வேறு கட்சிகளும் ஒரே அணியில் வந்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு "இந்தியா" எனப் பெயரிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் கூட பிரதமர் மோடி உரையாற்றும் போது, "இந்தியா" என்றே எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர்.
இந்தச் சூழலில் தான் வரும் செப். 18 முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்டுகிறது. இதில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கான மசோதா முன்மொழியப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. "இந்தியா" கூட்டணியைக் கண்டு அஞ்சியே பாஜக இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடி வருவது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள்












Click it and Unblock the Notifications